புத்தளத்தில் தேங்கி நிற்கும் வெள்ளநீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்

Published By: Digital Desk 4

01 Dec, 2021 | 12:36 PM
image

புத்தளம் நகரில் தேங்கி நிற்கும் வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கைகள் நேற்று இரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புத்தளம்,  கடையாக்குளம் , மணக்குன்று மற்றும் நூர்நகர் உள்ளிட்ட தாழ்நில பகுதிகள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில், புத்தளம் அநுராதபுரம் பிரதான வீதியின் ரயில் கடவைக்கு அருகில் உள்ள சிறிய கால்வாய் காணப்படுவதால் வெள்ளநீர் வேகமாக வழிந்தோட முடியாமல் தேங்கி காணப்படுவதாகவும், குறித்த கால்வாயை உடைத்து அகலமாக்கி வெள்ளநீர் வழிந்தோடுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு கோரி புத்தளம் - அநுராதபுரம் வீதியின் ரயில் பாதையை மறைத்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் வெள்ளநீர் வழிந்தோட முடியாதவாறு தேங்கி நிற்பதனால் தாங்கள் சிரமங்களை எதிர் நோக்கி வருவதுடன், தமது இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

குறித்த ரயில் பாதையை மறைத்து கூடாரங்களையும் அமைத்து உட்கார்ந்து கொண்ட  ஆர்ப்பாட்டக்காரர்கள் , சுலோகங்களையும் ஏந்தியவாறு தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை தங்கள் அவ்விடத்தை விட்டு நகரப்போவதில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், புத்தளம் மாவட்ட செயலாளர் கே.ஜி. விஜேசிறி ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு மாலை அதிகாரிகள் சகிதம் வருகை தந்திருந்தார்.

இதன்போது,  உரிய முறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடல்களை நடத்தி இதற்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொடுப்பதாகவும், ரயில் பாதையை மறித்து அமைக்கப்பட்ட கூடாரங்களை அப்புறப்படுத்தி விட்டு களைந்து செல்லுமாறும் மாவட்ட செயலாளர் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கூறினார்.

எனினும், இதற்கு நிரந்தரமாக தீர்வு கிடைக்கும் வரை அவ்விடத்தை விட்டு செல்லப்போவதில்லை என கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து, தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனையடுத்து, நேற்று மாலை 6 மணியளவில் புத்தளம் மாவட்ட செயலாளர் தலைமையில் அவசர கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

வீதி அபிவிருத்தி அதிகார சபை, நீர்பாசன திணைக்களம் என்பனவற்றின் பொறியியலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் புத்தளம் நகர பிதா எம் எஸ். எம் . ரபீக் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும. இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

மக்களின் கோரிக்கைகளக ஏற்று வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுப்பது என இதன்போது தீர்மானிக்கப்பட்டதுடன், எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பற்றி மக்களுக்கும் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று, காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையிலான 9 மணி நேர போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து களைந்து சென்றனர்.

இதேவேளை, புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியில் உள்ள ரயில் கடவைக்கு அருகில் பிரதான வீதியைக் குறுக்கே இரண்டரை அடி அகலத்தில் குழி தோண்டப்பட்டு வெள்ளநீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் இன்று இரவு 7 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33