கொவிட் கட்டுப்பாட்டு செயற்பாடுகளுக்காக மொத்தமாக 113 பில்லியன் ரூபா செலவு - கெஹலிய ரம்புக்வெல

Published By: Digital Desk 3

01 Dec, 2021 | 11:56 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் பாரிய போராட்டத்தில் முன்னெடுத்துக்கொண்டுள்ளது, அதில் பல தவறுகள் இடம்பெற்றாலும் கூட சவால்களை வெற்றிகொள்ள போராடிக்கொண்டுள்ளோம் என சபையில் சுட்டிக்காட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஒட்டுமொத்த கொவிட் கட்டுப்பாட்டு செயற்பாடுகளுக்காக மொத்தமாக 113 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவு செய்துள்ளதாகவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சுகாதார அமைச்சுக்கன் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் கொவிட் தடுப்பு செயற்பாடுகளை கட்டுப்படுத்த தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை. அதற்கான பணம் அரசாங்கத்திடம் இல்லையென எதிர்கட்சியினர் விமர்சித்துக்கொண்டிருந்த வேளையில் ஜனாதிபதி அதற்கு செவி மடுக்காது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை எடுத்தார். 

இந்தியாவின் நெருக்கடி மற்றும் ஏனைய சில சிக்கல்கள் காரணமாக எம்மால் தாமதம் ஏற்பட்டது, ஆனால் அதற்காக ஒரு தரப்பை மாத்திரம் நம்பியிருக்காது அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். 

கொவிட் வைரஸ் தொற்றை தடுக்கும் வேலைத்திட்டம் மற்றும் அதனுடன் சார்ந்த நடவடிக்கைகளுக்காக 113 பில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளது.

எமது சுகாதார துறையில் நாம் கடந்த காலம் குறித்து பேசிக்கொண்டிருக்காது எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும். எதிர்கால கொள்கைகளை வகுக்க வேண்டும். கொவிட் போராட்டத்தை நாம் முன்னெடுத்துக்கொண்டு செல்கின்றோம்.

அதில் குறைபாடுகள் இருந்தாலும் சவால்களை வெற்றிகொள்ள போராடிக்கொண்டுள்ளோம். அதே வேளையில் எதிர்கால சுகாதார திட்டங்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும். அதற்கான அவதானிப்புகளை செலுத்தியுள்ளோம். மக்களின் பாதுகாப்பு அரசாங்கத்தின் பொறுப்புகளில் ஒன்றாகும். 

மக்களை ஆரோக்கியமான மட்டத்தில் வைத்திருக்கும் வேலைத்திட்டங்களை உருவாக்க வேண்டும், பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண வேண்டும். துரித வைத்திய சேவைகளை முன்னெடுக்க வேண்டும். இது குறித்து கவனம் செலுத்தி வருகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46