தாய்வானை சீனா தாக்கினால் ஜப்பானும் அமெரிக்காவும் பொறுத்துக் கொண்டு இருக்காது, இதை பீஜிங் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே புதன்கிழமை தெரிவித்தார்.

Former Japanese Prime Minister Shinzo Abe visits Yasukuni Shrine in Tokyo, Japan August 15, 2021. REUTERS/Issei Kato

அத்துடன் தாய்வான் மீது ஆயுதம் ஏந்திய படையெடுப்பு ஜப்பானுக்கு பெரும் ஆபத்தாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தாய்வானிய சிந்தனைக் குழுவான தேசிய கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் உரையாற்றும்போதே அபே இதனைக் கூறினார்.

ஜனநாயக ரீதியில் ஆளப்படும் தீவுக்கு எதிராக தனது நாட்டின் இறையாண்மை உரிமைகோரல்களை ஜனாதிபதி ஜி ஜின்பிங் வலியுறுத்த முற்படுவதால், சீன உரிமை கோரும் தாய்வான் மீதான பதற்றங்கள் அதிகரித்துள்ளன. 

தாய்வான் அரசாங்கம் அமைதியை விரும்புவதாகக் கூறுகிறது, எனினும் தேவைப்பட்டால் தன்னைத் தற்காத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் கூறுகின்றது.