மஹிந்த சமரசிங்கவின் இராஜினாமாவைத் தொடர்ந்து வெற்றிடமாகியிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மஞ்சு லலித் வர்ணகுமார சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

மஹிந்த சமரசிங்ஹ, பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடந்த வாரம் எழுத்துமூலம் அறிவித்தார்.

2021, நவம்பர் 25 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாராளுமன்ற ஆசனத்தை மஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்திருப்பதாக அக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக கடமையாற்றுமாறு ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கையை மஹிந்த சமரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இந் நிலையிலேயே சற்று முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்த மஞ்சு லலித் வர்ண குமார சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

 2020 பொதுத் தேர்தலில் வர்ண குமார களுத்துறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிட்டு 46,361 வாக்குகளைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.