அமெரிக்க உயர்நிலைப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு ; மூவர் பலி, ஆசிரியர் உட்பட 8 பேர் காயம்

By Vishnu

01 Dec, 2021 | 09:22 AM
image

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டதுடன் ஒரு ஆசிரியர் உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

Image

டெட்ராய்டில் இருந்து வடக்கே சுமார் 30 மைல்கள் (48 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள ஆக்ஸ்போர்டு டவுன்ஷிப்பில் உள்ள ஆக்ஸ்போர்டு உயர்நிலை பாடசாலையில் துப்பாக்கிச் சூடு செவ்வாயன்று இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களில் 16 வயது சிறுவனும், 17 மற்றும் 14 வயதுகளையுடைய சிறுமிகளும் உள்ளடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

15 வயதுடைய சந்தேக நபர்,  அரை தானியங்கி கைத்துப்பாக்கி மூலம் 15 முதல் 20 வரை துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாக மிச்சிகன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் அவசரகால சேவைகளுக்கான அழைப்புகள் உள்ளூர் நேரப்படி 12:51 (17:51GMT) மணிக்கு வந்தது.

பொலிஸாருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட ஐந்து நிமிடங்களிலேயே சந்தேக நபரான அதே பள்ளியில் கல்வி பயிலும் இரண்டாம் வருட மாணவன் சரணடைந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

தாக்குதலின் நோக்கம் உடனடியாகத் தெரியாத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right