(என்.வீ.ஏ.)

காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2 ஆவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியின் 2 ஆம் நாளன்று அரைவாசி நாள் ஆட்டம் மாத்திரமே விளையாடப்பட்டபோதிலும் தொடரை சமப்படுத்துவதற்கான மேற்கிந்தியத் தீவுகளின் முயற்சி வெளிப்படத் தொடங்கியுள்ளது.

West Indies get together after snagging Pathum Nissanka, Sri Lanka vs West Indies, 2nd Test, Galle, 2nd day, November 30, 2021

போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதலாவது இன்னிங்ஸை ஒரு விக்கெட் இழப்புக்கு 113 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து தொடர்ந்த இலங்கை, எஞ்சிய 9 விக்கெட்களை 91 மேலதிக ஓட்டங்களுக்கு இழந்து மொத்தமாக 204 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பேர்மோல், வொரிக்கன் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளே இலங்கை துடுப்பாட்ட வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தன.

Pathum Nissanka gets the elbow up high to defend, Sri Lanka vs West Indies, 2nd Test, Galle, 2nd day, November 30, 2021

மதிய போசன இடைவேளைக்கு பின்னர் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய மேற்கிந்தியத் தீவுகள் அதன் முதலாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்து 69 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

க்ரெய்க் ப்ரத்வெய்ட், ஜெர்மெய்ன் ப்ளக்வூட் ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 62 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஜேர்மெய்ன் 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

மழை காரணமாக பிற்பகல் 2.;15 மணி அளவில் 2ஆம் நாள் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டபோது ப்ரெத்வெய்ட் 22 ஓட்டங்களுடனும் நிக்ருமா பொன்னர் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். அதன் பின்னர் ஆட்டம் தொடரவில்லை.

Dimuth Karunaratne shapes to cut the ball, Sri Lanka vs West Indies, 2nd Test, Galle, 1st day, November 29, 2021

பந்துவீச்சில் ப்ரவின் ஜயவிக்ரம 11 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தார்.

முன்னதாக இன்று காலை தனது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை, மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 26 ஓட்டங்கள் சேர்ந்தபோது ஒஷத பெர்னாண்டோ 18 ஓட்டங்களுடன் களம் விட்;டகன்றார்.

Pathum Nissanka steers one to third man, Sri Lanka vs West Indies, 2nd Test, Galle, 1st day, November 29, 2021

அதன் பின்னர் இலங்கையின் விக்கெட்கள் சீரான இடைவெளிகளில் விழ, கடைசி 8 விக்கெட்கள் வெறும் 65 ஓட்டங்களுக்கு சரிந்தன.

முதலாம் நாளன்று திறமையாகத் துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸன்க 73 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இவரைவிட ஏஞ்சலோ மெத்யூஸ் (29), அறிமுக வீரர் சரித் அசலன்க (10), சுரங்க லக்மால் (12) ஆகிய மூவரே இலங்கை சார்பாக இன்றைய தினம் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்ற வீரர்களாவர்.

Pathum Nissanka and Dimuth Karunaratne do some digging on the pitch, Sri Lanka vs West Indies, 2nd Test, Galle, 1st day, November 29, 2021

முதலாம் நாளன்று திமுத் கரணாரட்ன 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார்.

மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சில் வீராசாமி பேர்மோல் 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஜோமெல் வொரிக்கன் 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.