(என்.வி.ஏ)

பங்களாதேஷுக்கு எதிராக சட்டோக்ரம் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் பாகிஸ்தான் இலகுவாக வெற்றியீட்டியது.

Abid Ali and Abdullah Shafique run between the wickets, Bangladesh vs Pakistan, 1st Test, Chattogram, 4th day, November 29, 2021

முதலாவது இன்னிங்ஸ் நிறைவில் 44 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த பாகிஸ்தான், 2 ஆவது இன்னிங்ஸில் சகல துறைகளிலும் பிரகாசித்து வெற்றியை தனதாக்கிக்கொண்டது.

இந்த வெற்றியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் பாகிஸ்தான் முன்னிலை வகிக்கின்றது.

Bangladesh players celebrate the dismissal of Abdullah Shafique, Bangladesh vs Pakistan, 1st Test, Chattogram, 5th day, November 30, 2021

அத்துடன் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் 24 புள்ளிளைப் பெற்றுள்ள பாகிஸ்தான் விகிதாசார அடிப்படையில் 66 சதவீத புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை வகிக்கின்றது.

மேற்கிந்தியத் தீவுகளுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை 100 சதவீத புள்ளிகளுடன் விகிதாசார அடிப்படையில் முதலிடத்தில் இருக்கின்றது.

Abid Ali flicks to the leg side, Bangladesh vs Pakistan, 1st Test, Chattogram, 5th day, November 30, 2021

202 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு நான்காம் நாள் ஆட்டத்தின்போது தனது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான், ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 109 ஓட்டங்களை பெற்றிருந்தது.

வெற்றிக்கு மேலும் 93 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை (30) தனது துடுப்பாட்டத்தைத் தொடர்ந்த பாகிஸ்தான், 2 விக்கெட்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

Abdullah Shafique plays a sweep, Bangladesh vs Pakistan, 1st Test, Chattogram, 4th day, November 29, 2021

ஆரம்ப வீரர்களான அபிட் அலி, அப்துல்லா ஷபிக் ஆகிய இருவரும் 151 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். எனினும் இருவரும் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.

அபிட் அலி 91 ஓட்டங்களையும் அப்துல்லா ஷபிக் 73 ஓட்டங்களையும் பெற்றனர்.

Abid Ali pats one into the off side, Bangladesh vs Pakistan, 1st Test, Chattogram, 4th day, November 29, 2021

அஸார் அலி 24 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் பாபர் அஸாம் 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

எண்ணிக்கை சுருக்கம்

பங்களாதேஷ் 1ஆவது இன்: 330 (லிட்டன் தாஸ் 114, முஷ்பிக்குர் ரஹிம் 91, ஹசன் அலி 51 - 5 விக்.).

பாகிஸ்தான் 1ஆவது இன்: 286 (அபிட் அலி 133, அப்துல்லாஹ் ஷபிக் 52, தஜ்லும் இஸ்லாம் 116 - 7 விக்.)

பங்களாதேஷ் 2ஆவது இன்: 157 (லிட்டன் தாஸ் 59, யசிர் அலி 36, ஷஹித் ஷா அப்றிடி 32 - 5 விக்., சஜித் கான் 33 - 3 விக்.)

பாகிஸ்தான் 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 202) 203 - 2 விக். (அபிட் அலி 91, அப்துல்லா ஷபிக் 73)

ஆட்டநாயகன்: அபிட் அலி: