(எம்.மனோசித்ரா)

நாட்டில் 18 கொவிட் தொற்றால் ஏற்பட்ட மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளதாக இன்று செவ்வாய்கிழமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி குறித்த 18 கொவிட் மரணங்களுடன் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 14 346 ஆக உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 11 ஆண்களும் 7 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 11 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர்.

இன்று மாலை வரை 527 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இது வரையில் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 563 794 ஆக உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 540 387  பேர் குணமடைந்துள்ளனர். 9061 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.