சுமந்திரனின் பயணங்கள் தோல்வியா?

By Digital Desk 2

30 Nov, 2021 | 06:52 PM
image

என்.கண்ணன்

“அமெரிக்கப் பயணத்துடன் சுமந்திரன் கனடாவுக்குச் சென்றதும்,அங்கு நடத்திய ஒரு கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட குழப்பங்களும், பலத்த வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது”

“தமிழர் தரப்பிலுள்ள கடும்போக்காளர்களின் குரல்கள் உயர்ந்துவருகின்ற நிலையில், மிதவாதப் போக்குடையவர்களின் குரல்கள் மௌனிக்கப்படும் நிலைமைகள்ஏற்படுகின்றன என்ற செய்தியை சுமந்திரன் சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தமுனையலாம்”

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின்கனடா பயணங்கள் சர்ச்சைகளையும் உருவாக்கியிருக்கிறது.

அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் சுமந்திரன் இரண்டு தடவைகள் மாறிமாறி பயணித்திருக்கிறார்.

முதற்கட்டமாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல்நீதிப் பணியகத்தின் தலைவர் மைக்கல் ஜி கொசாக் உள்ளிட்ட அதிகாரிகளையும், ஜனநாயகம்,மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பணியக விவகாரங்களுக்கான பதில் உதவி இராஜாங்கச்செயலர் லிசா பீற்றர்சன் உள்ளிட்ட அதிகாரிகளையும் கூட்டமைப்பின் குழுவினர்சந்தித்திருந்தனர்.

அதையடுத்து, சுமந்திரன் கனடாவுக்குச் சென்று திரும்பிய பின்னர்,தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலர் டொனால்ட்லூவையும், வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பணியகத்தின் அதிகாரிகளையும்,பாராளுமன்ற வெளிவிவகாரக் குழுவின் உறுப்பினர்களையும்  சந்தித்துப் பேசியிருக்கின்றார்.

சுமந்திரன் தலைமையிலான குழுவினர் அமெரிக்க பயணத்தை ஆரம்பித்தபின்னர், உதவி இராஜாங்கச் செயலர் டொனால்ட் லூ மாலைதீவுக்கும், நேபாளத்துக்கும்பயணங்களை மேற்கொண்டிருந்தார்.

மாலைதீவுக்கு பயணம் மேற்கொண்ட அவர் இலங்கைக்கு வரவில்லை. அவருக்குஅடுத்த நிலையில் உள்ள கெலி கெய்டர்லிங் தான், அப்போது கொழும்புக்கு வந்து விட்டுச்சென்றிருந்தார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-11-28#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right