கபில்

“நினைவேந்தலைத் தடுப்பதை அரசின் வீண் பயம் என்று கொள்வதாஅல்லது தமிழரின் நினைவேந்தல் உரிமையை பறிக்க வேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடுஎன்பதா?” 

நீதிமன்றத் தடைக் கட்டளைகள், பாதுகாப்புக் கெடுபிடிகள், புலனாய்வுத்துறையினரின் கண்காணிப்புகள் என்று, வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் இம்முறையும்கெடுபிடிக்குள்ளான ஒரு நாளாக கடந்து போயிருக்கிறது.

இந்த நாள், மூன்று தசாப்தங்களாக தமிழரின் வாழ்வியலுடன்ஒன்றிணைந்திருக்கிறது.

போரில் உயிர்நீத்த தமது போராளிகளை நினைவு கூருவதற்காக  விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட நாளாக இருந்தாலும், அதற்கும்அப்பால் தமிழர்களால் பரவலாக நினைவு கூரப்படும் ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வாக இதுமாறியிருக்கிறது.

தமிழர் வாழ்வியலில், தனித்துவமான பண்டிகைகள் உள்ளதைப் போலவே, இதுவொருசிறப்பு வாய்ந்த நினைவேந்தல் நாளாக மாறிவிட்டது.

போர் முடிந்து 12 ஆண்டுகளாகி விட்ட நிலையில், விடுதலைப் புலிகளின்ஒழுங்கமைப்பிலான மாவீரர் நாள் நிகழ்வுகள் எதும் இடம்பெறாத நிலையிலும், இந்த நாள்நினைவில் கொள்ளப்படுகிறது என்பதே இது மக்கள் மயப்படுத்தப்பட்ட ஒன்று என்பதற்கானஅடையாளம்.

மாவீரர் நாளை நினைவு கூருவது தொடர்பாக, இலங்கையில் வேறுபட்டகொள்கைகள் அரசாங்கங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

நல்லாட்சி அரசாங்கம் பதவியில் இருந்த காலத்தில், 2015 தொடக்கம், 2018வரை, மாவீரர் நாளை துயிலுமில்லங்களில் நினைவு கூருவதற்கு தடைகள்விதிக்கப்படவில்லை.

கண்டும் காணாமல் அனுமதிக்கப்படும் ஒரு கொள்கை பின்பற்றப்பட்டது.

தற்போதைய கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் பதவிக்கு வந்த சில நாட்களில்,2019 மாவீர்ர் நாள் நினைவு கூரல் இடம்பெற்ற போதும், அதனையும் தடுப்பதற்குமுயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-11-28#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/