சி.அ.யோதிலிங்கம்

கனடாவில் சுமந்திரன் பங்குபற்றிய கூட்டம் குழப்பப்பட்ட விவகாரம் தமிழ்அரசியலின் பல தளங்களிலும் தற்போது பேசு பொருளாக மாறியிருக்கின்றது. மேற்படி கூட்டத்தில்சாணக்கியன் உரையாற்றும் வரை மௌனமாக இருந்த தமிழ் உணர்வாளர்கள் சுமந்திரன் பேசத்தொடங்கியதும்குழப்பங்களை விளைவித்து உரையாற்ற விடாமல் தடுத்திருந்தனர்.

 கூட்ட ஏற்பாட்டாளர்களினால்கனேடிய பொலிஸார் வரவழைக்கப்பட்ட போதும் சுமந்திரன் உரையாற்றுவதற்கு இடம் கொடுக்கப்படவில்லை.“துரோகியே திரும்பிப்போ” என்ற கோசங்களும் எழுப்பப்பட்டன.  இறுதியில் சுமந்திரன் பாதி உரையுடன் மண்டபத்தை விட்டுவெளியேறினார். அவர் வெளியேறும் போதும் “கனடாவிற்கு இனிமேல் வராதே” என்றும் கோசங்கள்எழுந்தன.

இக்குழப்பம் பற்றி வலைத்தளங்களில் மட்டும் சார்பாகவும்  எதிராகவும் கருத்துக்கள் வந்திருந்தன. அரசியல்வாதிகளிடமிருந்தோஅரசியல் கட்சிகளிடமிருந்தோ பெரிதாக கருத்துக்கள் எவையும் வரவில்லை. அமைச்சர் நாமல்ராஜபக்ஷ இக்குழப்பம் பற்றி கவலை தெரிவித்தார். மாவை சேனாதிராஜா “இக்குழப்பம் பற்றிகூட்டமைப்பின் கனடாக்கிளையுடன் விளக்கம் கேட்கப்படும்” எனக் குறிப்பிட்டார். 

இவை தவிர வேறு குரல்கள் ஒன்றும் அரசியல் தரப்பிடம் இருந்து வரவில்லை.குறிப்பாக  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளிடமிருந்தோதமிழரசுக்கட்சியின்  உறுப்பினர்களிடமிருந்தோஎதுவும் வரவில்லை. சுமந்திரனும் இக்குழப்பம் பற்றி மேலோட்டமாக கருத்துக்களை தெரிவித்தாரேதவிர விரிவாக எதனையும் கூறவில்லை.

       இந்தக்குழப்பம் தமிழ்த்தேசியஅரசியலின் செல்நெறி பற்றி மீண்டும் விவாதங்களைத் தொடக்கி இருக்கின்றது. உண்மையில் இதன்அடிவேர் 2009 இற்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்ட தமிழ் அரசியலில் இருக்கின்றது.  2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத்தொடர்ந்து இரண்டு அரசியல் போக்குகள் எழுச்சியடைந்தன. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-11-28#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/