ஏம்.எஸ்.தீன் 

கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் 2021 நவம்பர் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலைஇடம்பெற்ற படகு விபத்தில் பயணித்தவர்களில் 6பேர் மரணித்துள்ளனர். இச்சம்பவம் முழுநாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

பாடசாலைக்கு சென்ற சிறார்களின் இந்த மரணத்திற்கு அரசியல்வாதிகளும், பொறுப்புடையஅதிகாரிகளும் பதில் சொல்லியாக வேண்டும். மிகவும் அவசியமான தேவைகளைப் பூர்த்தி செய்யாதுவிட்டமையின் ஒரு அசம்பாவிதாமாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது. 

முஸ்லிம் அரசியல்வாதிகள் சமூகத்தின் பல விவகாரங்களில் அசமந்தமாகவே செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். காலத்திற்கு காலம் ஆட்சியாளர்களுடன் நிபந்தனையில்லாது ஒட்டிக்கொண்டு வெறுமனே கொந்தராத்துக்களையே பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.  தரகு வியாபாரிகளின் வேலைகளையே இவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இதனால் தான் குறிஞ்சாக்கேணி ஆற்றினைக் கடப்பதற்காக போடவிருந்த பாலம் அமைக்கும்பணி மந்தமாக செயற்பட்டுள்ளது. வீதிகளை அமைப்பதில் காட்டிய அக்கறையை இந்தப் பாலம் அமைப்பதற்குக்காட்டவில்லை. இவ்வாறு புறக்கணிக்கப்பட்ட பல பாலங்கள் நாட்டில் இன்னுமுள்ளன. 

1977ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இப்பாலம் சேதமடைந்து போக்குவரத்துச் செய்வதற்குமுடியாத நிலையில் பாலம் இரண்டாக உடைந்து காணப்பட்டது. இதனால், இப்பாலத்தின் ஊடாக போக்குவரத்துமுற்றாக தடைப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிக சிரமங்களை எதிர்கொண்டார்கள். 

இந்நிலையில் தற்காலிக இரும்புப்பாலமொன்று அமைக்கப்பட்டது. இதுவும் சேதமைடைந்நது.பொதுமக்களும், மாணவர்களும் போக்குவரத்துக்களை மேற்கொள்வதற்கு பெரும் துன்பங்களை அனுபவித்தனர். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-11-28#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/