ஹரிகரன்

“தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், ஜனநாயகம் அருகிவருவது, அடிப்படை சுதந்திரங்களுக்கு ஆபத்து அதிகரித்திருப்பது, மனித உரிமைகளுக்குகாணப்படுகின்ற அச்சுறுத்தல் என்பன அதிகரித்துக் கொண்டிருக்கின்றன”

வரும் டிசம்பர் மாதம் 9ஆம், 10ஆம் திகதிகளில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு சர்வதேச மாநாட்டில் இருந்து இலங்கைபுறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா நடத்தவுள்ள ஜனநாயகத்துக்கான உச்சி மாநாட்டுக்கு இலங்கைஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

உலகத் தலைவர்கள், சிவில் சமூகங்கள், மற்றும் தனியார் துறையினரைஉள்ளடக்கி, ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான இந்த உச்சி மாநாட்டை மெய்நிகர்முறையில் நடத்தவுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்.

இதற்காக அவர் 108 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்புவிடுத்திருக்கிறார்.

அழைப்பு விடுக்கப்படாத நாடுகளுக்குள் சீனா, ரஷ்யா, வடகொரியா,வெனிசுவேலா, ஈரான், கியூபா போன்ற நாடுகளின் வரிசையில் இலங்கையும்இடம்பெற்றிருக்கிறது.

ஜனநாயக ஆட்சி நடைபெறும் நாடுகளே பெரும்பாலும் இந்த மாநாட்டுக்குஅழைக்கப்பட்டிருக்கின்றன. 

எனினும், ஜனநாயகமும் மனித உரிமைகளும் சவாலுக்குள்ளாகியுள்ள போலந்து,பிலிப்பைன்ஸ், மெக்சிக்கோ போன்ற நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருக்கிறது.

ஆனால், மத்திய கிழக்கில் ஈராக் மற்றும் இஸ்ரேல் தவிர்ந்த ஏனையநாடுகள் விலக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு பெரும்பாலும் முடியாட்சியேநிலவுகிறது அல்லது, ஜனநாயகத்துக்கு இடமில்லாத சூழல் காணப்படுகிறது.

அதேவேளை தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்தில் இருந்து இந்தியா,மாலைதீவு, நேபாளம், ஆகிய நாடுகளுடன் பாகிஸ்தானுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.

சீனா, ரஷ்யா, கியூபா, வடகொரியா, ஈரான் போன்ற நாடுகள், கம்யூனிசஆட்சிமுறையைக் கொண்டவை அல்லது, அமெரிக்க எதிர்ப்பு அல்லது விரோத நிலைப்பாட்டைக்கொண்டவை.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-11-28#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/