தேசிய சுகாதார வேலைத்திட்டத்தில் பெருந்தோட்ட மக்களை புறக்கணித்தமை ஏன ? -  வடிவேல் சுரேஷ்

Published By: Digital Desk 3

30 Nov, 2021 | 05:04 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் சுகாதார சேவையை தேசிய வேலைத்திட்டமாக மாற்றி எமது பெருந்தோட்ட மக்களுக்கான முழுமையான சுகாதார சேவையை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும், எமது பகுதியில் தமிழ் பேசும் தாதியர், வைத்தியர்களை இணைத்து எமது மக்களுக்கு சேவைசெய்ய இடமளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (30 ) இடம்பெற்ற சுகாதாரத்துறை அமைச்சு மற்றும் மூன்று இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் சுகாதார சேவையில் ஒரு தேசிய கொள்கையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அது நாட்டில் சகல தரப்பினருக்கும் ஒரே விதமாக செயற்படவும் வேண்டும். ஆனால் மலையகத்தில் அவ்வாறான நிலைமை காணப்படுவதில்லை. 

இலவச சுகாதார சேவை மலையக மக்களை சென்றடைவதில் பாரிய குறைபாடு காணப்படுகின்றது. மலையகத்தில் காணப்படும் 543 வைத்தியசாலைகளையும் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வந்து தகுதியாக வைத்தியர்களை அதுவும் தமிழ் பேசும் வைத்தியர்களை நியமிக்கவேண்டும் என்ற தீர்மானம் இருந்தும் அது இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

பெருந்தோட்ட வைத்தியசாலைகளை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் பெற்றும் இன்னமும் அவை முன்னெடுக்கப்படாது இடை நிறுத்தப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன? கொவிட் வைரஸ் பரவல் காலங்களில் கூட இதனால் முழுமையான பலன் கிடைக்கவில்லை. 

எனினும் 1990 சேவை மிகப்பெரியது. அதனை நாம் மறுக்கவும் இல்லை. ஆனால் சுகாதார அமைச்சின் கீழ் பெருந்தோட்ட வைத்தியசாலைகள் இயங்காதமை  ஏன் என்ற கேள்வியே எழுகின்றது. பதுளை மாவட்டத்திலும், நுவரெலியா மாவட்டத்திலும் பல வைத்தியசாலைகள் செயற்படாது கைவிடப்பட்டுள்ளன.

நோய் என்பது இனம், மதம், பிரதேசம் பார்த்து வரும் ஒன்றல்ல. எனவே தேசிய சுகாதார வேலைத்திட்டத்தை முழுமையாக மலையகத்திற்கும் வழங்க வேண்டும். 

இதில் பாகுபாடு காட்டக்கூடாது. எமது மக்கள் பாரிய அசம்பாவிதங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். எனவே மனிதாபிமான ரீதியில் தேசிய சுகாதார சேவைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

இன்று அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது, எரிவாயு சிலிண்டர்கள் எப்போது வெடிக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

இவ்வாறான பல பிரச்சினைகளுக்கு மத்தியில் சுகாதார மருத்துவ சேவையையும் மட்டுப்படுத்த வேண்டாம். மொழியை, இனத்தை வைத்து எம்மை மட்டுப்படுத்த வேண்டாம். 

எமது பகுதியில் தமிழ் பேசும் தாதியர், வைத்தியர்களை இணைத்து எமது மக்களுக்கு சேவைசெய்ய இடமளிக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48