பொதுஜன பெரமுன - சுதந்திரக்கட்சி முரண்பாடு ஆரோக்கியமானது - அரசாங்கம்

30 Nov, 2021 | 02:09 PM
image

(எம்.மனோசித்ரா)

கூட்டணியாக இணைந்து அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்திற்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவது ஆரோக்கியமான விடயமாகும். 

இவ்வாறான கருத்து முரண்பாடுகளே ஆரோக்கியமான அரச நிர்வாகத்திற்கான காரணியாகவும் அமையும்.

எனவே பொதுஜன பெரமுனவிற்கும் சுதந்திர கட்சிக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகளால் அரசாங்கம் பிளவடையும் என்று கருதக் கூடாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்கிழமை (30) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கூட்டணி ஆட்சியை அமைத்துள்ள அனைத்து நாடுகளிலும் அரசாங்கத்திற்குள் வெவ்வேறு கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. 

இலங்கையிலும் அதே நிலைமையே காணப்படுகிறது. இவ்வாறான கருத்து முரண்பாடுகளே ஆரோக்கியமான அரச நிர்வாகத்திற்கான காரணியாக அமையும்.

எனவே அரசாங்கத்திற்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவதை ஆரோக்கியமாக அறிகுறியாகவே காண வேண்டும். 

இந்தியா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுடுகளிலும் இது போன்ற நிலைமை காணப்படுகிறது. கூட்டணி அரசாங்கம் என்பதன் பொருள் வௌ;வேறு நிலைப்பாடுகளின் ஒன்றிணைவாகும்.

எதிர்க்கட்சியும் ஒரு கூட்டணியாகும். எதிர்க்கட்சிக்குள்ளும் இவ்வாறான முரண்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. 

இதனை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சி பலவீனமடைந்துள்ளது என்று கூற முடியாது. எனவே ஆளுங்கட்சிக்குள்ளோ அல்லது எதிர்க்கட்சிக்குள்ளோ கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டால் அதனை இறுதியாகக் கருத வேண்டாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right