மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை, முதல் இன்னிங்ஸில் 204 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

Image

நேற்று காலி மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் முதலாம் நாள் ஆட்டநேர முடிவின்போது ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில் 113 ஓட்டங்களை பெற்று நல்ல நிலையில் இருந்தது இலங்கை.

எனினும் இன்றைய தினம் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் சாமர்த்தியத்தினால் 61.3 ஓவர்களுக்கு மாத்திரம் தாக்கு பிடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் பத்தும் நிஸ்ஸான்க 73 ஓட்டங்களையும், அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 42 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர்.

பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் சார்பில் சிறப்பாக பந்து வீசிய வீராசாமி பெருமாள் 5 விக்கெட்டுகளையும், ஜோமல் வாரிக்கன் 4 விக்கெட்டுகளையும் மற்றும ஹோல்டர் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

Image

பின்னர் தனது முதல் இன்னிங்ஸுக்காக பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் மேற்கிந்தியத்தீவுகள் 4 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்று 2 ஓட்டங்களை பெற்றுள்ளனர்.