(எம்.மனோசித்ரா)

நத்தார் பண்டிகையின் போது நாட்டை முடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என அமைச்சரவை இணைபேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அத்துடன் ஒமிக்ரான் என்ற புதிய பிறழ்வின் காரணமாக உலகலாவிய ரீதியில் மீண்டும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.