உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெள்ளிக்கிழமைக்குள் குழுவொன்றை நியமிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இந்த தகவலை இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

நாட்டில் சமையல் எரிவாயு கசிவினால் ஏற்படும் வெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகிக் கொண்டிருக்கின்றன. நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியிலும் , நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை கேகாலை, கொழும்பு, திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் 5 வீடுகளில் இவ்வாறான வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

அதற்கமைய இம்மாதத்தில் மாத்திரம் இதுபோன்ற 11 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.