தளபதி விஜயின் 'பீஸ்ட்' அப்டேட்

By Gayathri

30 Nov, 2021 | 04:33 PM
image

தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் 'பீஸ்ட்' படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 'டொக்டர்' படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'பீஸ்ட்'. 

தளபதி விஜய் கதையின் நாயகனாக நடித்து வரும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். 

சன் பிக்சர்ஸ் சார்பில் தயாராகி வரும் இந்தப் படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இந்த படத்தின் நூறாவது நாள் படப்பிடிப்பு நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் விஜய் பங்குபற்றிய படப்பிடிப்பின் பிரத்தியேக புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த புகைப்படத்தில் இசைக்குழு ஒன்றில் விஜய் டிரம்ஸ் வாசிப்பது போன்றும், நாயகி பூஜா ஹெக்டே பாட்டு பாடுவது போன்றும், அத்துடன் நடிகர்கள் விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, நடிகை அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் இடம் பெற்றிருக்கிறார்கள். 

நேற்று இணையத்தில் வெளியான இந்தப் புகைப்படம், விஜய் இரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. 

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நட்சத்திரங்களாக திகழும் பல நடிகர்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பை 20 முதல் 60 நாட்களுக்குள் நிறைவு செய்யும் இந்தத் தருணத்தில், தமிழ் திரை உலகின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் படத்தின் படப்பிடிப்பு, 100 நாளை கடந்து செல்வதை சிலர் ஆரோக்கியமாகவும், சிலர் எதிர்மறையாகவும் விமர்சிக்க தொடங்கியிருக்கிறார்கள். 

இருப்பினும் வசூலில் விஜய் தன்னிகரற்ற சக்கரவர்த்தி என்பதாலும், தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் என்பதாலும், இத்தகைய நூறாவது நாள் படப்பிடிப்பையும் கொண்டாடி விளம்பரப்படுத்துகிறார்கள் என திரை உலகினர் தெரிவிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பௌத்த அறக் கொள்கையை பேணும் சிங்களவர்களை...

2022-11-28 21:07:19
news-image

ஓமான் தூதரக அதிகாரி கொழும்பு விமானநிலையத்தில்...

2022-11-29 05:48:09
news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38