உலகின் மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனத்துக்கு புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக இருந்த ஜாக் டோர்சி நேற்று தனது பதவியை இராஜினாமா செய்தார். 

இதனையடுத்து, டுவிட்டர் நிறுவனத்தின் அடுத்த தலைமை நிறைவேற்று அதிகாரி யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்தன.

இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

இந்தியாவை பூர்விகமாக கொண்ட பராக் அகர்வால் மும்பை ஐ.ஐ.டி.யில் படித்தவர். இவர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் டுவிட்டர் நிறுவனத்தில் வேலலைக்குச் சேர்ந்தார். 

கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற முக்கிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக பொறுப்பு வகிக்கும் இந்தியர்களான சுந்தர் பிச்சை (கூகுள்) மற்றும் சத்யா நாதெள்ளா ஆகியோரை தொடர்ந்து பராக் அகர்வாலும் முக்கிய நிறுவனமான டுவிட்டரின் தலைமை பொறுப்புக்கு உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.