சுபத்ரா

இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகள், ஒத்துழைப்புகளை ரஷ்யா திடீரென வலுப்படுத்தஆரம்பித்திருக்கிறது.

கடந்தவாரம் மொஸ்கோவில் இருந்து இரண்டு உயர்மட்டப் பாதுகாப்புக்குழுக்கள் கொழும்புக்குப் பயணங்களை மேற்கொண்டிருக்கின்றன.

ஒன்று, ரஷ்ய பாதுகாப்புச் சபையின், செயலர் நிகொலோய் பட்ருஷேவ் (Nikolay Patrushev) தலைமையிலான குழு. 

இந்தக் குழுவில், ரஷ்ய பாதுகாப்புச் சபையின் பிரதி செயலர்களான அலெக்சாண்டர்வெனெடிக்கோவ், ஒலேக் காரமோவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இரண்டு, ரஷ்ய ஆயுதப்படைகளின் பொறியியல் துருப்புகளின் தளபதியான லெப்டினன்ட்ஜெனரல் யூரி ஸ்ராவிட்ஸ்கி (Yuri Stavitsky) தலைமையிலான ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்டக்குழு.

இந்தக் குழுக்களின் வருகையுடன் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற இருதரப்புபயணங்கள், சந்திப்புகள், போர்க்கப்பல்களின் வருகைகள் என்பன, தெற்காசியாவில், குறிப்பாக இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளைவலுப்படுத்துவதில் ரஷ்யா காட்டுகின்ற தீவிர ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கின்றன.

ரஷ்ய ஜனாதிபதி புடின் தலைமையிலான,  ரஷ்யாவின் பாதுகாப்புச் சபை, முன்னாள் ஜனாதிபதிடிமிட்றி மெட்வெடேவ்வை (Dmitry Medvedev) பிரதி தலைவராக கொண்டது.

அரசியலமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்ட இந்தப் பாதுகாப்புச் சபையில், மூன்றாவது அதிகாரம்பெற்றவராக விளங்குகிறார், அதன்செயலர் நிகொலோய் பட்ருஷேவ்.

இவர், முன்னர் ரஷ்ய புலனாய்வு அமைப்பான கேஜிபியில் பணியாற்றியவர். பின்னர்சமஷ்டி பாதுகாப்புச் சேவை (FGB) தலைவராக இருந்தவர்.

அவர், கடந்த 22ஆம் திகதி தனியான விசேட விமானத்தில் இலங்கைக்கு மேற்கொண்டிருக்கின்றமூன்று நாள் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-11-28#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/