சுவீடனின் முதல் பெண் பிரதமராக தேர்வுசெய்யப்பட்டு, சில மணிநேரங்களிலேயே தனது பதவியை இராஜினாமா செய்த மக்டலினா ஆண்டர்சன் மீண்டும் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Image

சுவீடன் பாராளுமன்றில் திங்களன்று நடைபெற்ற மற்றொர் வாக்கெடுப்பு அவருக்கு மீண்டும் பிரதமர் பதவியே பெற்றுத தந்தது.

சுவீடன் பாராளுமன்றில் திங்களன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் அண்டர்சன் மிகக் குறைந்த வாக்குகளினால் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

173 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர், மேலும் இருவர் அவருக்கு எதிராக வாக்களித்திருதால் அவர் இந்த உயர் பதவியை இழந்திருப்பார்.

எவ்வாறெனினும் ஆறு நாட்களில் இரண்டாவது முறையாக மக்டலினா ஆண்டர்சன் சுவீடன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

செவ்வாயன்று அந்நாட்டு மன்னருடன் நடந்த சந்திப்பிற்குப் பிறகு அவர் அதிகாரப்பூர்வமாக பிரதமர் பணிகளை ஆரம்பிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆண்டர்சன் முதன்முதலில் கடந்த வாரம் பிரதம அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் அவர் முன்மொழியப்பட்ட வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அதே நாளில் அவர் இராஜினாமா செய்தார் மற்றும் அவர் வழிநடத்துவார் என்று நம்பிய கூட்டணி அரசாங்கம் பிளவுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.