இங்கிலீஷ் படம் ஆங்கில படமாக மாறியது

Published By: Robert

27 Sep, 2016 | 02:03 PM
image

இங்கிலீஷ் படம் ஆங்கில படமாக மாறியுள்ளது ஆச்சர்யத்தை கொடுக்கிறதா? 

ஆர்.ஜே.மீடியா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘இங்கிலீஷ் படம்’. இப்படம் தற்போது ‘ஆங்கில படம்’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. படத்தில் தலைப்பில் ஆங்கிலம் இருப்பதால் இப்படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காது என்பதற்காக ‘ஆங்கிலப்படம்’ என்று மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது. 

இப்படத்தை புதுமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை பற்றி அவர் கூறும்போது, ‘ஆங்கில படம்’ என்று பெயர் வைத்ததற்கு காரணம் இக்கதையில் வரும் அடுத்தடுத்த காட்சிகள் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கதை நகரும். இந்த கதையை பல நடிகர்களிடம் சொன்னபோது கதை நல்லா இருக்கு, ஆனா நீ புது இயக்குனர், சொன்னமாதிரி எடுப்பாயா என கேட்டனர்.

ஆனால் இப்போது ராம்கி, சஞ்சீவ் கூட்டணியில் படம் சூப்பராக வந்துள்ளது. படம் பார்த்த தயாரிப்பாளர் உள்பட அனைவரும் மகிழ்ச்சி. உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமாக உள்ளது. மேலும் சந்தோஷப்படுத்த படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் விரைவில் திரைக்கு வரும் என்றார். 

இப்படத்தில் ராம்கி, சஞ்சீவ் மட்டுமல்லாது மீனாட்சி, சிங்கம்புலி, சிங்கமுத்து, மதுமிதா என்று நிறைய நட்சத்திர பட்டாளங்கள் உள்ளனர். நாயகியாக புதுமுகம் ஸ்ரீஜாவும் அறிமுகமாகிறார். படத்திற்கு இசை எம்.சி.ரிக்கோ, ஒளிப்பதிவு சாய்சதிஷ்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்