நாடளாவிய ரீதியில் பெரும் பகுதியில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.

Thumb download

குறித்த மின் தடைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், கொத்மலை மின்னுற்பத்தி நிலையம் முதல் பியகம வரையிலான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இருப்பினும் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு மின்விநியோகத்தை சீர்ப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.