சத்ரியன் 

ஆட்சிமாற்றம் நிகழப் போகிறது என்றபரவலான பேச்சுக்களுக்கு மத்தியில், தற்போதைய அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு, மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன்நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

225 பேர் கொண்ட பாராளுமன்றத்தில்,மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு, 151 வாக்குகள் கிடைத்தால் போதும்.

ஆனால் 153 வாக்குகளுடன்,நிறைவேறியிருக்கிறது இந்த வரவுசெலவுத் திட்டம்.

20ஆவது திருத்தச் சட்டத்தைநிறைவேற்றிய போதும், அதற்குப் பின்னரும், தற்போதைய அரசாங்கம், மூன்றில் இரண்டுபெரும்பான்மை பலத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு வருகிறது.

பொதுஜன பெரமுன கூட்டணியில் வெற்றிபெற்ற 145 உறுப்பினர்கள், ஈ.பி.டி.பி.யை சேர்ந்த 2 பேர், தேசிய காங்கிரஸ்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, எமது சக்தி மக்கள் கட்சி ஆகியவற்றை சேர்ந்த தலாஒருவர் என ஆளும்கட்சி 150 பேரைக் கொண்டுள்ளது.

மேலதிகமாக, ஐக்கிய மக்கள்சக்தியில் இருந்து தெரிவாகிய டயானா கமகே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூவர்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூவர் ஆகியோரும் தற்போதைய அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்து பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தஅரவிந்தகுமாரும் தௌபீக்கும் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

ஆளும்தரப்பில் அதிருப்தி கொண்டவிஜேதாச ராஜபக்ஷவும், ரிரான் அலஸும் பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்காதவர்களுள்அடங்கியுள்ளனர். விஜேதாச ராஜபக்ஷ மாற்று அரசமைக்க வழியில்லை என்பதால் வரவு,செலவுத்திட்டத்தை தோற்கடித்துப் பயனில்லை என்று கூறியிருந்தார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-11-28#page-4

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/