அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான பொதுஜன பெரமுனவுக்கும்பங்காளியான சுதந்திரக் கட்சிக்கும்இடையிலான முரண்பாடுகள் உச்ச நிலையை அடைந்து பகிரங்கவெளியில் வாதப்பிரதிவாங்கள் செய்யும் நிலைமையை அடைந்திருக்கிறது.
கடந்த சில மாதங்களாகவே சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும்இடையிலான முரண்பாடுகள் நீடித்து வந்த நிலையில் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் பகிரங்கமாகஇரு தரப்பினரும் சொற்போர் நடத்தினர்.
கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியின் செலவு தலைப்பு தொடர்பான குழுநிலைவிவாதம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அமைச்சர்மஹிந்தானந்த அளுத்கமகே தற்போதைய ஜனாதிபதி வருடம் ஒன்றுக்கு 1.7 பில்லியன் ரூபாவை செலவுசெய்வதாகவும் எனினும் முன்னாள் ஜனாதிபதி வருடம்ஒன்றுக்கு 3 பில்லியனுக்கு மேல் செலவழித்து இருப்பதாகவும் சுட்டிக் காட்டியிருந்தார். அத்துடன் இரண்டு வீடுகளை இணைத்து மைத்திரிபால தனது உத்தியோகபூர்வ இல்லத்தை தற்போது அமைத்து இருப்பதாகவும்அவர் தெரிவித்திருந்தார்.
இந்தவிடயம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் கட்சிக்கும்கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்துகடந்த புதன்கிழமை சுதந்திர கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் கூடி இது தொடர்பாகபேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். அதில், தொடர்ச்சியாக அரசாங்க தரப்பினரால் தமக்கு எதிராக தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால கவலை வெளியிட்டிருக்கிறார்.அதனையடுத்து பொதுஜனபெரமுன பாராளுமன்றில் வைத்து தம்மை தாக்கியமைக்கு பதிலளடி வழங்கத்தீர்மானித்தது சுதந்திரக்கட்சி.
அதற்கமைவாக, கடந்த வியாழக்கிழமை காலை வேளையில் சுதந்திர கட்சியின் பொதுசெயலாளர் தயாசிறி ஜயசேகர இந்த விடயத்தை பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். இதன்போதுதமக்கு எதிராக தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் தாம் அரசாங்கத்தில் இணைந்துபயணிக்க விரும்புவதாகவும் எனினும் தொடர்ச்சியாகதமக்குஎதிரான செயற்பாடுகள பொறுத்துக்கொண்டிருக்கமுடியாது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-11-28#page-5
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM