கார்வண்ணன்

பசுமை விவசாயத்தை முன்னெடுப்பதற்குஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் எடுத்த அதிரடியான தீர்மானங்கள்,தோல்வியைச் சந்தித்திருக்கின்றன.

இராணுவ பாணியில் கோட்டாபய ராஜபக்ஷஎடுத்த முடிவு அவரையும் அவரது அரசாங்கத்தையும் பின்நோக்கித் திரும்பும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

இந்தியாவில், பிரதமர் நரேந்திரமோடி அரசாங்கமும், இதுபோன்றதொரு நிலையை எதிர்கொண்டது.

அங்கு பாஜக அரசாங்கத்தினால்விவசாயம் தொடர்பான மூன்று அவசர சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருந்தன.

அதற்கு எதிராக மாதக்கணக்கில்நீடித்த விவசாயிகளின் போராட்டத்தை அடுத்து, சில நாட்களுக்கு முன்னதாக, அந்தச்சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்திருந்தார் இந்தியப் பிரதமர் மோடி.

அவரது அந்த அறிவிப்புக்குப்பின்னால் ஒரு முக்கியமான காரணம் இருந்தது. விரைவில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப்உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடக்கப் போகிறது. 

அங்கு ஆட்சியைப் பிடிப்பதற்குவிவசாயிகள் போராட்டங்கள தடையாக இருந்து கொண்டிருக்கின்றன.

இதனால் விவசாயச் சட்டங்களை ரத்துச்செய்வதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

அதேபோலத் தான், கோட்டாபய ராஜபக்ஷஅரசாங்கம், இரசாயன உரங்கள் தொடர்பாக எடுத்த முடிவு தொடர்பான அழுங்குப் பிடியில்இருந்து பின்வாங்கியிருக்கிறது.

இரசாயன உரங்கள், கிருமிநாசினிகளைஇறக்குமதி செய்வதற்கு தனியார் துறையினருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக விவசாயஅமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இரசாயன உரத்தை தடை செய்வதற்குஅரசாங்கம் முடிவு செய்ததில் இருந்து, அந்த முடிவை ரத்துச் செய்வதற்கு முடிவுசெய்தது வரையான காலகட்டத்துக்குள், ஏராளமான குழப்பமான முடிவுகளை அரசாங்கம்எடுத்தது.

அந்தக் குழப்பமான முடிவுகளும்,அவற்றை நியாயப்படுத்தும் வகையில் ஜனாதிபதி தொடக்கம், அதிகாரிகள் வரை வெளியிட்டகருத்துக்களும், அதனை மேலும் மோசமடையச் செய்தன.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-11-28#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/