(ஆர்.யசி ,எம்.ஆர்.எம்.வசீம்)

கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக மன்னார் மாவட்ட மக்கள் இடம்பெயரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 

எனவே உடனடியாக மக்களுக்கான இடர் நிவாரணம் மற்றும் நீர் அகற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் சபையில் கோரிக்கையொன்றை முன்வைத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை, வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் கேள்வி எழுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாவட்ட அனர்த்த நிலைமைகள் குறித்து சபைக்கு தெரியப்படுத்தினார்.