சுவீடனில் ஒரு நாள் பிரதமர் “அரசியல் மாற்றங்களும், சமூகக் காரணிகளும்” : சர்வதேச விவகாரம்

By Digital Desk 2

29 Nov, 2021 | 04:10 PM
image

தமிழ் சினிமாவில் வந்த ஒருநாள் முதல்வரைப்போலத்தான் சுவீடனில் ஒருநாள் பிரதமர் நிகழ்வொன்றுநடந்தேறியிருக்கிறது. 

அரசியலில்பழுத்த அனுபவம் நிறைந்தவராகவும், நிதியமைச்சராகவும்கடமையாற்றி இருந்தார் கடந்த புதன்கிழமை பிரதமராகநியமிக்கப்பட்ட பெண்மணி. மக்களவையில்அவரது நியமனம் அறிவிக்கப்பட்டவுடன், மற்றைய பாராளுமன்றஉறுப்பினர்கள் எழுந்து நின்று மரியாதைசெலுத்துகிறார்கள்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நியமனம் அல்லவா? அந்ததேசத்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்து நூறு வருடங்களுக்குப் பின்னர்பிரதமராக நியமிக்கப்படும் முதலாவது பெண். ஆனால்,துரதிஷ்டம், நியமனம் பெற்று ஏழுமணித்தியாலங்களுக்குள் தமது இராஜினாமா பற்றிஅறிவிக்கிறார்.  இந்தப்பெண்ணின் பெயர் மக்தலேனா அன்டர்ஸன்.

பல மணித்தியாலங்கள்நீடித்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, கூட்டணியின் தலைவியாகத் தெரிவு செய்யப்பட்டவர் இவர். எனினும்,கூட்டணியில் அங்கம் வகித்த கட்சியொன்றுஅதில் இருந்து விலகியதைத் தொடர்ந்து,தமது சில மணித்தியால பதவியைஇராஜினாமா செய்கிறார். பங்காளிக் கட்சியொன்று விலகுமானால், கூட்டணி இராஜினாமா செய்யவேண்டுமென அரசியல் யாப்பில் கூறப்பட்டிருக்கிறது.அப்படியானால், தாமும் விலகுவது தானேநியாயம் என்று தனது இராஜினாமாவுக்குகாரணம் கூறுகிறார் மக்தலேனா.

இந்த இராஜினாமாவிற்கு காரணம் கூட்டணிச் சிக்கல்கள்தானெனத் தோன்றலாம். இதற்குப் பின்னால் பெரியதொரு கதை இருக்கிறது. இது உலகின் மிகச் சிறந்தஜனநாயகத்தைக் கொண்டதென வர்ணிக்கப்படும் தேசமொன்றின் தயாள குணத்துடன் பின்னிப்பிணைந்தது.  ஏதிலிகளாகவந்தாரை வரவேற்று பல்லின கலாசாரங்களை மதித்துநடந்த சமூகத்தின் நிலைமாற்றத்துடன் தொடர்புடையது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-11-28#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்