கோதுமை மாவின் விலை அதிகரிப்பை உறுதிப்படுத்தியது பிறிமா நிறுவனம்

Published By: Digital Desk 3

29 Nov, 2021 | 12:32 PM
image

கோதுமை மாவின் விலை நேற்று முன்தினம் முதல் 17  ரூபாய் 50 சதத்தினால் அதிகரித்துள்ளமையை பிறிமா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

டொலர் பிரச்சினை காரணமாக கோதுமை மா இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக சந்தையில் கோதுமை மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் இரண்டு பிரதான நிறுவனங்கள் கோதுமை மா விநியோகத்தை முன்னெடுக்கின்றன.

பாண் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் கோதுமை நேற்று முன்தினம் முதல் 17 ரூபா 50 சதத்தினாலும், ஏனைய உணவு பொருட்களுக்கான மாவின் விலை 130 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் மாவின் விலை 8 ரூபா தொடக்கம் 10 ரூபா வரையில் மாத்திரம் அதிகரிக்கப்பட்டது.

கோதுமை மாவின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டதால் பெரும் நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளோம்.

நட்டமடைந்த நிலையில் விற்பனை பொருட்களின் விலையை அதிகரிக்காமல் தொடர்ந்து சேவை நடவடிக்கைகளை முன்னெடுத்து  செல்ல முடியாது.

சமையல் எரிவாயுவின் விலை நியாயமற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.முட்டையின் விலை 22 ரூபாவினாலம், மாஜரின் மற்றும் ஏனைய பொருட்களின் விலைகளும் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டுள்ள.

பேக்கரி உணவு உற்பத்தியில் நீர் தவிர்ந்த ஏனைய பொருட்களின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.மூலப்பொருட்களின் விலையேற்றத்திற்கமைய பாணின் விற்பனை விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டும்.

அதற்கமைய 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ருபாவினாலும், ஏனைய பேக்கரி உணவு பொருட்களின் விலையை நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 5 ரூபா தொடக்கம் 10 ரூபா வரையில் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது.

கோதுமை மா மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதன் காரணமாக கொத்து ரொட்டியின் விலையை 10 ரூபாவினாலும், ரோல்ஸ், மரகறி ரொட்டி, முட்டை ரொட்டி, பராடா ரொட்டி ஆகியவற்றின் விலையை 05 ரூபாவினாலும் அதிகரிக்க சிற்றுண்டி உரிமையாளர் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர் என்றார்.

சமையல் எரிவாயு, கோதுமை மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீதான கட்டுப்பாட்டு விலை கடந்த ஒக்டோபர் மாதம் முதல்வாரத்தில் நீக்கப்பட்டதை தொடர்ந்து சமையல் எரிவாயு, கோதுமை ஆகிய பொருட்களின் விலை அம்மாதம் 11 ஆம் திகதி சடுதியாக அதிகரிக்கப்பட்டது.

அதற்கமைய ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விற்பனை விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 97 ரூபா என குறிப்பிடப்பட்டது.

கோதுமைமாவின் விற்பனை விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பாண் ஒரு இறாத்தலின் விலை 5 ரூபாவினாலும், பணிஸ், டீ பணிஸ், பால்தேநீர் ஆகியவற்றின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டது

உணவு பொதி ஒன்றின் விலை 10 ரூபாவினாலும்,தேநீர் கோப்பை ஒன்றின் விலை 05 ரூபாவினாலும் இம்மாதம் 23ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான நிலையில் தற்போது மீண்டும் பாண் மற்றும் பேக்கரி உணவு பொருட்களின் விலைகளும், சிற்றுண்டி உணவு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38