கடந்த சில நாட்களாக இலங்கையின் பல பகுதிகளில் நிலவும் வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட சீரற்ற காலநிலை காரணமாக குறைந்தது 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மூவர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமல்போயுள்ளார்.

6954 குடும்பங்களைச் சேர்ந்த 24628 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் பாதகமான வானிலை காரணமாக 3 வீடுகள் முழுமையாகவும், 83 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. சுமார் 793 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 

14 மாவட்டங்களை சேர்ந்த பகுதிகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.