ஓமிக்ரான் மாறுபாடு ; பயணத் தடைகளை நீக்குமாறு தென்னாபிரிக்க ஜனாதிபதி அழைப்பு

By Vishnu

29 Nov, 2021 | 09:07 AM
image

புதிய கொவிட்-19 மாறுபாடான ஓமிக்ரான் வெடிப்பால் தனது நாட்டிற்கும், அண்டை நாடுகள் மீதும் விதிக்கப்பட்டுள்ள பயணத் தடைகளை தென்னாபிரக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா கண்டித்துள்ளார்.

சர்வதேச நாடுகளில் இந்த செயலால் ஆழ்ந்த ஏமாற்றடைந்துள்ளதாக கூறிய ரமபோசா, மேலும் தடைகள் அவசரமாக நீக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

Ramaphosa to address South Africa on Sunday evening

"எங்கள் நாடு மற்றும் நமது தென்னாபிரிக்க சகோதர நாடுகளின் மீது பயணத் தடைகளை விதித்துள்ள அனைத்து நாடுகளும் உடனடியாகவும் அவசரமாகவும் தங்கள் முடிவுகளை மாற்றியமைக்குமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்," என்று அந்த ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய உரையில் அவர் கூறினார்.

பயணத் தடை விதித்த முக்கிய நாடுகளில் இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும்.

தென்னாபிரிக்க விஞ்ஞானிகள் இந்த வாரம் புதிய மாறுபாட்டை வெளிப்படுத்தியதிலிருந்து டஜன் கணக்கான நாடுகள் தென்னாபிரிக்காவையும் அதன் அண்டை நாடுகளையும் தடுப்புப்பட்டியலில் சேர்த்துள்ளன. 

உலக சுகாதார அமைப்பு (WHO) ஓமிக்ரானை ஒரு "கவலையின் மாறுபாடு" என்று கூறியுள்ளது. இது முந்தைய மாறுபாடுகளை விட மிகவும் ஆபத்தான தொற்றுநோயாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right