கட்டான - களுவாரிப்புவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் அனுமதியின்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 23 கிலோ கிராம் பொட்டாசியம் நைட்ரேட் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 54 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த வீட்டில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, வாள் மற்றும் இரண்டு கூரிய கத்திகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.