இலங்கை - மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று

By Vishnu

29 Nov, 2021 | 08:01 AM
image

இலங்கை - மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் மேற்கிந்திய தீவுகள் அணியை இரண்டு இன்னிங்ஸ்களிலும் குறைந்த ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது, இரு ‍போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் அணியை முன்னிலை பெற உதவியது.

முதல் டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணி இழந்த 20 விக்கெட்டுகளில் 19 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றினர். 

இரண்டு இன்னிங்ஸிலும் வேகப்பந்து வீச்சாளர்களான சுரகா லக்மல் மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் 18 ஓவர்கள் மட்டுமே வீசினர். போட்டியில் வீசப்பட்ட மொத்த 165 ஓவர்களில் இது 10% ஆகும். 

முதல் போட்டியில் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவின் சிறப்பான ஆட்டமும் அணிக்கு நம்பிக்கை அளித்தது. முதல், இரண்டாவது இன்னிங்ஸுகளுக்கு முறையே அவர் 147 மற்றும் 83 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

அவர் தவிர பத்தும் நிஸ்ஸாங்க, தனஞ்ய டிசில்வா மற்றும் அஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோர் அரை சதம் விளாசியுள்ளனர்.  

முதல் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை முதல் இன்னிங்ஸில் 386 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் 230 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

பின்னர் 156 ஓட்ட முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்‍ஸை ஆரம்பித்த இலங்கை திமுத் கருணாரத்ன மற்றும் அஞ்சலோ மெத்யூஸ் ஆகியோரின் அரை சதத்துடன் 191 ஓட்டங்களை பெற்று டிக்ளே செய்தது.

இதனால் மேற்கிந்தியத்தீவுகளுக்கு 348 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

அந்த இலக்கினை துரத்திய மேற்கிந்தியத்தீவுகளுக்கு ஆரம்பம் படு மோசமாக அமைந்தது. ஏனெனில் அவர்கள் 18 ஓட்டங்களை பெறுவதற்குள்ளே 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

எனினும் நிக்ருமா பொன்னர் மற்றும் ஜோசுவா டா சில்வா ஆகியோர் ஏழாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்து இலங்கையின் வெற்றியை தாமதப்படுத்தினர்.

இருந்தபோதும் மேற்கிந்தியத்தீவுகள் 118 ஓட்டங்களை பெற்றபோது ஜோசுவா டா சில்வா 54 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க அடுத்தடுத்து வந்த துடுப்பாட்ட வீரர்களும் நீண்ட நேரம் தாக்குபிடிக்காது ஆட்டமிழந்தனர்.

இறுதியாக மேற்கிந்தியத்தீவுகள் 79 ஓவர்களில் 160 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதனால் இலங்கை முதல் போட்டியில் 187 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றது.

இந் நிலையில் இலங்கைக்கு எதிராக இன்று ஆரம்பமாகும் இரண்டாவது டெஸ்ட்டில் மேற்கிந்தியத்தீவுகள் இலங்கைக்கு எதிராக தவறுகளை திருத்திக் கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம் 2023 ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தற்போது முதல் இடத்தைப் பிடித்துள்ள இலங்கை, ஒயிட்வாஷ் செய்து, அதன் வெற்றி பயணத்தை தக்க வைக்க விரும்பும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மிச்செல்களின் அபார ஆட்டங்கள் நியூஸிலாந்தின் வெற்றிக்கு...

2023-01-28 11:53:55
news-image

2022ஆம் ஆண்டின் சிறந்த விமானப்படை விளையாட்டு...

2023-01-28 11:07:43
news-image

அவுஸ்திரேலியாவை வெற்றிகொண்ட இங்கிலாந்து இறுதிப் போட்டியில்...

2023-01-27 21:58:26
news-image

மகளிர் இருபது 20 உலகக் கிண்ணத்தில்...

2023-01-27 20:31:41
news-image

முதலாவது அரை இறுதியில் இந்தியா -...

2023-01-27 13:26:33
news-image

வருடத்தின் அதிசிறந்த ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்...

2023-01-27 16:59:41
news-image

வருடத்தின் ஐசிசி வளர்ந்துவரும் அதிசிறந்த வீரர்...

2023-01-26 22:07:16
news-image

2022ஆம் வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட்...

2023-01-26 22:08:08
news-image

பாபர் அஸாமுக்கு வருடத்தின் அதிசிறந்த ஐசிசி...

2023-01-26 17:32:25
news-image

வருடத்தின் அதிசிறந்த ஐ.சி.சி. கிரிக்கெட் வீரர்...

2023-01-26 15:37:19
news-image

ஆசிய விளையாட்டு விழாவில் ரஷ்யர்கள் பங்குபற்றலாம்...

2023-01-26 15:41:21
news-image

வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்...

2023-01-26 14:36:35