(எம்.மனோசித்ரா)
அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்த கூற்று தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதனை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபம் தேட முற்படுகின்றன. அரசியல் கைப்பாவையாக மாற வேண்டாம் என்று அருட் தந்தைகளை கேட்டுக் கொள்வதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கட்டுகம்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
சமையல் எரிவாயு கசிவினால் ஏற்படும் வெடிப்பு சம்பவங்களால் நாட்டில் எவரும் உயிரிழக்கவில்லை. பொலன்னறுவை பிரதேசத்தில் சமையல் எரிவாயு கசிவினால் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர் இறப்பதற்கு முன்னர் விபத்து தொடர்பில் பொலிஸாரிடம் வாக்குமூலமளித்துள்ளார்.
இது போன்ற விடயங்களின் உண்மையை ஆராயந்து செய்திகளை வெளியிட வேண்டும். நாட்டில் பெற்றோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தேசிய ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த ஆனந்த பாலித்த அண்மையில் தெரிவித்திருந்தார். அது மக்களை வரிசையில் காத்திருக்க வைத்தது. ஆனால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை.
அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்த கூற்று தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
பொதுமக்கள் அல்லது மதகுருமார்கள் கூறும் குற்றச்சாட்டுகளை விசாரிப்பது சி.ஐ.டி.யின் பணியும் கடமையும் ஆகும். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ளாதிருந்தால் இந்த அறிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியிருக்கும். அருட்தந்தை சிறில் காமினிக்கு எதிராக சட்டம் பயன்படுத்தப்படவில்லை. அரசியல் கைப்பாவையாக மாற வேண்டாம் என்று அருட் தந்தைகளை கேட்டுக் கொள்கிறேன்.
1971 இல் ஜே.ஆர்.ஜயவர்தன எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கு உதவுவதாகக் கூறினார்.
ஆனால் இன்றுள்ள எதிர்க்கட்சி அவ்வாறு இல்லை. நாடு முன்னேற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கொவிட் காலத்தில் தடுப்பூசியைப் பெறுவதற்காக வருகை தந்தவர்களே தற்போது அந்தந்த நாடுகளுக்கு திரும்புகின்றனர்.
இதனை நாட்டு மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக எதிர்க்கட்சி திரிபுபடுத்துகிறது. தற்போது வெளிநாடு செல்லும் மக்களை நாம் வணங்க வேண்டும். அவர்களிடமிருந்து வரும் டொலர்களால்தான் நாட்டிற்கு எண்ணெய் கூட இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த மக்களைத் தான் நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் என்று அவமானப்படுத்தியுள்ளனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM