(எம்.மனோசித்ரா)

பாலின அடிப்படையிலான வன்முறைகளை எதிர்த்து போராடுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டினை வலியுறுத்தியுள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் , இந்தப் பகுதியில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகள் குறித்து இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவரிடம் விளக்கியுள்ளார்.

வருடாந்த 'ஆரஞ்சு உலகம் : பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான செயற்பாட்டின் 16 நாட்கள்' சர்வதேச பிரசாரத்தைக் குறைக்கும் வகையில் , கொழும்பிலுள்ள நெதர்லாந்து தூதுவர் தஞ்சா கோங்கிரிஜ் 'ஆரஞ்சு உலக பாதாகையை' வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிடம் கையளித்தார். இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாதாகையைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் , பாலின அடிப்படையிலான வன்முறைகளை எதிர்த்து போராடுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டினை மீண்டும் வலியுறுத்தியதுடன் , இந்தப் பகுதியில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகள் குறித்து விளக்கினார்.

பாலின சமத்துவத்தை அடைவதற்கும் , அனைத்து மகளிருக்கு அதிகாரமளிப்பதற்குமான நிலையான இலக்கை அடைவதில் பாலின வன்முறையை தடுப்பதும் , நிவர்த்தி செய்வதும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும் என்பதை அவர் அங்கீகரித்தார்.

அரசாங்கத்தின் தேசிய கொள்கைக் கட்டமைப்பான 'நாட்டை கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை' பாலின சமத்துவம் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையைக் குறைத்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமையத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.