நெருக்கடியை எதிர்கொள்ள அரசாங்கம் சர்வதேச நாயணய நிதியத்தை நாட வேண்டும் - ஹர்ஷ டி சில்வா

Published By: Digital Desk 4

28 Nov, 2021 | 10:05 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை எதிர்வரும் 12 மாதங்களில் 7726 மில்லியன் டொலர் வெளிநாட்டு கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது.

ஆனால் தற்போது 2200 மில்லியன் டொலர் மாத்திரமே கையிருப்பில் உள்ளது. அதில் 1600 மில்லியன் டொலர் மாத்திரமே பயன்படுத்தக் கூடிய நிதியாகும்.

இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் சர்வதேச நாயணய நிதியத்தை நாட வேண்டும். அவ்வாறில்லை எனில் வெளிநாட்டு கடன்தவணைகளை மீள்திட்டமிடலுக்குட்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

Articles Tagged Under: ஹர்ஷ டி சில்வா | Virakesari.lk

வெளிநாட்டு கடன்களுக்கு அப்பால் உள்நாட்டு வங்கிகளிடமிருந்து அரசாங்கம் 1.46 பில்லியன் டொலர் கடன் பெற்றுள்ளது. இதனை அரசாங்கம் மீள செலுத்தாவிட்டால் நாட்டின் வங்கி கட்டமைப்பு பெறும் பாதிப்பை எதிர்கொள்ளும் என்றும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் தற்போது பணவீக்கம் வானளவிற்கு உயர்ந்துள்ளது. பொருட்களின் விலைகளும் கண்மூடித்தனமாக அதிகரிக்கப்படுகின்றன. இவற்றுக்கு டொலர் நெருக்கடியே காரணம் என்று அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கிறது. டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு பரிந்துரைத்தாலும் அரசாங்கம் அதனை மறுக்கின்றது.

இவ்வருடம் ஒக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆண்டு செப்டெம்பர் வரையான 12 மாதங்களில் 7726 மில்லியன் டொலர் வெளிநாட்டு கடனை மீள செலுத்த வேண்டியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது 2200 மில்லியன் டொலர் மாத்திரமே கையிருப்பில் உள்ளது. அதில் 1600 மில்லியன் டொலர் மாத்திரமே பயன்படு;த்தக் கூடிய நிதியாகும். இம்மாத இறுதியில் இந்த நிதி மேலும் குறைவடையும்.

இவ்வாறான நிலையில் ஒருபுறம் கடன் மீளச் செலுத்தல் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. அதே போன்று மறுபுறம் அத்தியாவசிய பொருள் இறக்குமதி தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.

தற்போது அரசாங்கம் இறக்குமதிகளை மட்டுப்படுத்தி டொலரை மீதப்படுத்தி வெளிநாட்டு கடனை மீள செலுத்துவதில் அவதானம் செலுத்தியுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய சுமார் 1000 கொல்கலன்கள் துறைமுகங்களில் தேங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தியாவிடமிருந்து ஒன்றரை பில்லியன் டொலரைப் பெறுவது தொடர்பில் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர சீனா, ஓமான், கட்டார் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலிருந்தும் டொலர் கிடைக்கும் என்று கூறிக் கொண்டிருந்த போதிலும் , அவ்வாறு கிடைப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை.

அத்தோடு தேசிய சொத்துக்களை விற்று 6 பில்லியனைப் பெறுவதற்கான முயற்சியாக அண்மையில் அரசாங்கம் பாரிய முதலீட்டு மாநாடொன்றையும் நடத்தியுள்ளது.

யுகதனவி வேலைத்திட்டத்தின் ஊடாக 250 மில்லியன் டொலரைப் பெற்றுக் கொண்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இது போன்ற செயற்பாடுகள் டொலர் நெருக்கடிக்கான தீர்வாக அமையாது. இதற்கான இரு மாற்று வழிகள் உள்ளன. அவற்றில் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதாகும். மற்றையது வெளிநாட்டு கடன்தவணைகளை மீள்திட்டமிடலுக்கு உட்படுத்துவதாகும்.

இரண்டாவது தெரிவான மீள்திட்டமிடலுக்குச் சென்றால் செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டித் தொகையை அடுத்ததடுத்த ஆண்டுகளுக்கு பிற்போடு முடியும். எனவே இதன் மூலம் கையிருப்பிலுள்ள டொலர் குறைவடையாமல் பேண முடியும். அதே போன்று முதற்தெரிவான சர்வதேச நாயணய நிதியத்தை நாடினால் வருடாந்தம் செலுத்த வேண்டிய கடன் தவணையை 10 , 15 அல்லது 20 வீதத்தினால் குறைத்துக் கொள்ள முடியும்.

அவ்வாறன்று இதே நிலைமை தொடருமாயின் பொருளாதார நெருக்கடிகள் எதிர்வரும் குறுகிய காலத்திற்குள் சமூக மற்றும் அரசியல் நெருக்கடியாக உக்கிரமடையும். சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதன் ஊடாக கடன் பெற முடியாது. கடன் கோரிகாலும் 1 அல்லது 2 பில்லியன் டொலர்களை மாத்திரமே பெற முடியும். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஆகக் கூடிய தொகையாக 2.6 பில்லியன் டொலரை மஹிந்த ராஜபக்ஷவே பெற்றுள்ளார்.

சர்வதேச நாயண நிதியம் சர்வதேசத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் , அங்கீகரிக்கப்பட்டதுமான அமைப்பாகும். இதனை நாடுவதன் மூலம் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் மற்றும் இலங்கைக்கு இடையில் மூன்றாம் தரப்பாக செயற்பட்டு எமக்கான கடன் மீள் செலுத்தல் சலுகைகள் பெற்றுக் கொடுக்கப்படும். வெளிநாட்டு கடன்களுக்கு அப்பால் உள்நாட்டு வங்கிகளிடமிருந்து அரசாங்கம் 1.46 பில்லியன் டொலர் கடன் பெற்றுள்ளது. இதனை அரசாங்கம் மீள செலுத்தாவிட்டால் நாட்டின் வங்கி கட்டமைப்பு பெறும் பாதிப்பை எதிர்கொள்ளும்.

இவ்வாறான நெருக்கடிகளை சமாளிப்பதற்கு குறைந்தது 4 பில்லியன் டொலராவது கையிருப்பில் இருக்க வேண்டும். எனவே இதனை முகாமைத்துவம் செய்ய முடியவில்லை எனில் , இயாலாமையை ஒப்புக்கொண்டு விலகிச் செல்லுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

சவால்களை நாம் பொறுப்பேற்று பொருளாதாரத்தை மேம்படுத்துகின்றோம். சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்ல வேண்டுமாயின் விதிக்கப்படும் ஒரேயொரு நிபந்தனை அரச நிதி கொள்கையாகும். அதனை அரசாங்கம் முறையாகப் பேண வேண்டும். எனினும் அண்மையில் இலங்கைக்கு மூன்றரை பில்லியன் டொலரை தருவதாகவும் , அதனை பெற்றுக் கொள்வதாயின் எல்.என்.ஜி.யின் ஒரு பகுதியை தமக்கு வழங்க வேண்டும் என்றும் ஓமான் நிபந்தனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தினால் இவ்வாறு எந்த நிபந்தனையும் விதிக்கப்பட மாட்டாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16