(எம்.மனோசித்ரா)
'ஒமிக்ரோன்' வைரஸானது மூன்று தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களையும் தாக்கக் கூடியது என்று ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு இதற்கு முன்னர் இனங்காணப்பட்ட வைரஸ்களை விட அதிகளவானோருக்கு பரவக்கூடியது என்பதோடு , இறப்புக்களையும் அதிகரிக்கக் கூடியதுமாகும்.
எனவே இலங்கையில் புதிய திரிபுகள் குறித்த கற்கைகளையும் ஆய்வுகளையும் அதிகரிக்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் தென் ஆபிரிக்காவில் இனங்காணப்பட்ட இந்த வைரஸ் அண்மையில் இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலும் இனங்காணப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இலங்கையிலும் இந்த வைரஸ் பரவியிருக்காது என்று உறுதிபடக் கூற முடியாது. எனவே துறைமுகம் மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட வைரஸ் நுழையக்கூடிய மூலங்களில் கொவிட் சோதனைகள் விஸ்திரப்படுத்தப்பட வேண்டும் என்றும் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் வலியுறுத்தினார்.
'ஒமிக்ரோன்' வைரஸின் தாக்கங்கள் குறித்து வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெளிவுபடுத்துகையில் ,
'ஒமிக்ரோன்' வைரஸானது வேரியன்ட்ஸ் ஒஃப் கொன்சேர்ன் (Variant of Concern) ஆகக் கருதப்படுகிறது. அதாவது இதுவரை காலமும் இனங்காணப்பட்ட திரிபுகள் வேரியன்ட்ஸ் ஒஃப் கொன்சேர்ன் (Variant of Concern) மற்றும் வேரியன்ட்ஸ் ஒஃப் இன்ரெஸ்ட் (Variant of interest) என்ற இருவகைகளுக்குள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் வேரியன்ட்ஸ் ஒஃப் கொன்சேர்ன் எனும் போது வைரசினுடைய பிரதான நிற மூர்த்தங்களில் மாற்றங்கள் ஏற்படும். வேரியன்ட்ஸ் ஒஃப் இன்ரெஸ்ட் எனும் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படுவதாகும். இதனை வைரஸின் விகாரத்தில் ஏற்படுகின்ற பிரதான மாற்றமாகக் குறிப்பிடுகின்றோம். இது ஏனைய வைரஸ்களுடன் ஒப்பிடும் போது அபாயம் அதிகமுடையதாகக் காணப்படுகிறது.
ஆரம்பத்தில் தென் ஆபிரிக்காவில் இனங்காணப்பட்ட இந்த வைரஸ் அண்மையில் இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலும் இனங்காணப்பட்டுள்ளது.
இது ஏனைய நாடுகளுக்கும் இலகுவாகப் பரவக் கூடியதாக இருக்கும். அதனடிப்படையில் இலங்கையிலும் இந்த வைரஸ் பரவியிருக்காது என்று உறுதிபடக் கூற முடியாது.
காரணம் இலங்கையில் விமான நிலையங்களில் கொவிட் பரிசோதனை முன்னெடுக்கும் நடவடிக்கை கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டுள்ளது. மாறாக இவ் வைரஸ் இலங்கைக்குள் இதுவரையில் நுழைந்திருக்காவிட்டாலும் இனிவரும் காலங்களில் நுழையக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
அத்தோடு ஒமிக்ரோன் வைரஸானது இதற்கு முன்னர் இனங்காணப்பட்ட வைரஸ்களை விட அதிகளவானோருக்கு தொற்றக் கூடியது என்றும் , அதிகளவான உயிரிழப்புக்களை ஏற்படுத்தக் கூடிய ஆற்றல் மிக்கது என்றும் ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இலங்கையிலும் இந்த வைரஸின் தாக்கங்கள் இனங்காணப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. மேலும் இஸ்ரேலில் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியதாக இனங்காணப்பட்டவர்கள் 3 தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் என்பது சுட்டிக்காட்ட வேண்டிய விடயமாகும். எனவே மூன்று தடுப்பூசிகளைப் பெற்றவர்களை இந்த வைரஸ் தாக்கக் கூடிய வாய்ப்பும் உள்ளது.
மேலும் பைசர் தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனம் , தமது தயாரிப்புக்கள் எந்தளவிற்கு இந்த புதிய வைரசுக்கு தாக்குபிடிக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது என்று தெரிவித்துள்ளது.
எனவே இலங்கையில் இந்த வைரஸ் பரவுமாயின் ஏனைய வைரஸ் பரவலால் ஏற்பட்ட பாதிப்புக்களை விட பன்மடங்கு பாதிப்புக்களை எதிர்கொள்ள வேண்டியேற்படும். எனவே புதிய திரிபுக்கள் பற்றி கற்கைகள் மற்றும் ஆய்வுகள் வினைத்திறனான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அதே போன்று வெளிநாடுகளிலிருந்து வைரஸ் வரக் கூடிய மூலங்கள் அதாவது இறங்குதுறை, விமானநிலையம் உள்ளிட்டவற்றில் வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்கள் முறையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
அத்தோடு 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் துரிதப்பட வேண்டும். அனைத்திற்கும் மேலதிகமாக சகலரும் சுகாதார விதிமுறைகளை இறுக்கமாக கடைபிடிக்க வேண்டும். நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் அதில் இந்த வைரஸ் பாரிய தாக்கத்தைச் செலுத்தும். எனவே பொதுமக்கள் உள்ளிட்ட சகலரும் இதன் தார்பரியத்தை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM