புத்தளம் ஆராச்சிக்கட்டுவ வைரன்கட்டுவ பிரதேசத்திலுள்ள ஓலை வீடொன்றில் வைக்கப்பட்டிருந்த சிறிய சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்துள்ளமை தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், கசிவு ஏற்பட்ட குறித்த சமையல் எரிவாயுவினால் எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை எனவும் ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் குறிப்பிட்டனர்.
இன்று 5.0 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரை கொள்வனவு செய்து வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குறித்த சிலிண்டரிலிருந்து கசிவுடன் தீப்பிடித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இதனையடுத்து, உடன் செயற்பட்ட வீட்டார் அந்த சமையல் எரிவாயுவை உடனடியாக இழுத்தெடுத்துச் சென்று கழிவுநீருக்குள் வீசியுள்ளனர்.
இவ்வாறு செயற்பட்டமையினால் உயிர்ச் சேதங்களோ அல்லது சொத்துக்களுக்கு சேதங்களோ ஏற்படவில்லை என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM