கடற்பாதுகாப்பினை உறுதிப்படுத்த இந்தியா - இலங்கை - மாலைதீவு கூட்டு கடற்பயிற்சிகள்

By T Yuwaraj

28 Nov, 2021 | 09:39 PM
image

( எம்.மனோசித்ரா)

இந்தியா - இலங்கை - மாலைதீவுகள் என்பவற்றுக்கிடையிலான முத்தரப்பு கூட்டு கடற்பயிற்சிகள் கடந்த இரு தினங்களாக நடைபெற்று வருகின்றன.

கொழும்பு பாதுகாப்பு கூட்டுகுழுமத்தின் வழிகாட்டலின் அடிப்படையில் இந்த பயிற்சிகள் நடைபெறுவதுடன் கடற்பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்பினை ஒருங்கிணைப்பதற்கான முக்கிய செயற்பாடாகவும் இது அமைவதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்தியா இலங்கை ஆகிய நாடுகளைக் கொண்ட பிராந்திய கடல்சார் பாதுகாப்பு குழுவில்  வங்கதேசம் | August 25, 2021 www.ilakku.org

கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுமத்தின் அவதானத்துடனான இந்த நடவடிக்கைகள் நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை தழுவியதாகவும் மூன்று கடற்படையினரதும் இயங்குதிறனை மேம்படுத்துவதாகவும் அமைகின்றன.

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்.சுபத்ரா ரோந்து கப்பல் மற்றும் P8ஐ நீண்டதூர கடல் ரோந்து விமானம், அதேபோல இலங்கை கடற்படைக்கு சொந்தமான எஸ்.எல்.என்.எஸ்.சமுதுர ஆகியவை இப்பயிற்சிகளில் இணைந்திருக்கும் நிலையில் மாலைதீவு தேசிய பாதுகாப்பு படைக்கு  சொந்தமான MNDFகடல் மார்க்க வேவு விமானமும் இவற்றுடன் இணைந்துள்ளன.

இந்த இரு நாள் பயிற்சிகள், அந்தந்த பிரத்தியேக பொருளாதார வலயங்களில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு, தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் கடலில் மீட்பு நடவடிக்கைகள், வான் மார்க்கமான மீட்பு பணிகள் மற்றும் வினைத்திறன்மிக்க தொடர்பினை ஸ்தாபித்தல் ஆகிய விடயங்களில் களரீதியான ஈடுபாட்டினைப்பெற்றுக்கொள்வதற்கு வழிவகுத்துள்ளது.

கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுமமானது கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான நான்காவது முத்தரப்பு மாநாட்டில் நிறுவப்பட்டதுடன் அதற்கான செயலகம் 2021 மார்ச் கொழும்பில் நிறுவப்பட்டது. 

மேலும் 2021 ஆகஸ்ட்டில் நடைபெற்ற கொழும்பு பாதுகாப்பு கூட்டுகுழுமத்தின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட மாநாடு பிராந்தியத்தில் பொதுவான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளுதல் தொடர்பான புரிதல் மற்றும் சிறந்த இயங்குதிறனை அடைவதற்கான சிறந்த வாய்ப்புக்களை வழங்கியதாக  இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right