அனைத்து மக்களையும் உள்ளடக்கிய ஆட்சி மற்றும் மனித உரிமைகள் என்பன உறுதி செய்யப்பட வேண்டும் - ஐ.நா. வலியுறுத்தல்

Published By: Digital Desk 2

28 Nov, 2021 | 04:55 PM
image

நா.தனுஜா

நாட்டின் அனைத்துத்தரப்பினரையும் உள்ளடக்கிய ஆட்சி நிர்வாகம், சிறந்த குடிமைத்தொடர்பு (சிவில் சமூகத்தொடர்பு) மற்றும் அனைத்து இலங்கையர்களினதும் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றை உறுதிசெய்யவேண்டும் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச்செயலாளர் காலித் கியாரி வலியுறுத்தியுள்ளார்.

 அரசியல் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான திணைக்களத்தின் மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச்செயலாளர் காலித் கியாரி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த செவ்வாய்கிழமை நாட்டிற்கு வருகைதந்திருந்ததுடன், இலங்கையில் அவரது பணிகள் கடந்த வியாழக்கிழமையுடன் முடிவிற்கு வந்தன.

இலங்கையில் தங்கியிருந்த காலப்பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, நீதியமைச்சர் அலி சப்ரி, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் காலித் கியாரி சந்திப்புக்களை மேற்கொண்டார்.

 இதன்போது நிறைபேறான சமாதானத்தை அடைந்துகொள்வதற்கான முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்றத்தயாராக இருப்பதை ஏற்றுக்கொண்டுள்ள அவர், அனைத்துத்தரப்பினரையும் உள்ளடக்கிய ஆட்சி நிர்வாகம், சிறந்த சிவில் சமூகத்தொடர்பு மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு விரும்பும் அனைத்து இலங்கையர்களினதும் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றின் அவசியம் தொடர்பிலும் வலியுறுத்தியுள்ளார். 

அதுமாத்திரமன்றி அவற்றை நிறைவேற்றுவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மேலும் இலங்கைக்கான விஜயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள காலித் கியாரி, 'தற்போதைய மற்றும் கடந்தகால சவால்கள் குறித்தும் வாய்ப்புக்கள் தொடர்பிலும் இலங்கையின் பல்வேறுபட்ட தரப்பினரதும் அபிப்பிராயங்களைக் கேட்டறியமுடிந்தமை மெச்சத்தக்கதாகும். அதேவேளை சமாதானம் மற்றும் அபிவிருத்தி ஆகிய விடயங்களில் இலங்கையும் ஐக்கிய நாடுகள் சபையும் ஒன்றிணைந்து பணியாற்றுகின்றமையை அவர்கள் வரவேற்றமையையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்' என்று தெரிவித்துள்ளார்.

 

அதுமாத்திரமன்றி 16 நிறைபேறான அபிவிருத்தி இலக்குகள் உள்ளடங்கலாக எதிர்வரும் 2030 ஆம் ஆண்டில் நிலையான அபிவிருத்தியை அடைவதற்கு எதிர்பார்த்துள்ள இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருப்பதாக இச்சந்திப்புக்களின்போது உறுதியளித்ததாகவும் காலித் கியாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ்த் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரிட்டன்...

2026-02-18 18:14:01
news-image

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்த...

2026-02-18 18:15:46
news-image

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மின் நுகர்வோருக்காக...

2026-02-18 17:54:08
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு திருகோணமலை...

2026-02-18 17:18:51
news-image

வத்தளையில் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

2026-02-18 17:16:06
news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37
news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54