இரசாயன உர பாவனைக்கும் உற்பத்தி அதிகரிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்  ரமேஷ் பத்திரண

Published By: Digital Desk 2

28 Nov, 2021 | 04:12 PM
image

ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்

இரசாயன உர பாவனைக்கும் உற்பத்தி அதிகரிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உரம் வழங்கிய காலத்திலும் உரம் இல்லாத இந்த காலப்பகுதியிலும் உற்பத்தியில் எந்த வித்தியாசமும் இல்லை. மாறாக உர துஷ்பிரயோகமே இடம்பெற்று வருகின்றது.

அத்துடன் ஆடைத் தொழில் உற்பத்தி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் உற்பத்தி ஏற்றுமதி மூலம் எதிர்வரும் இரண்டு வருடங்களில் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக  பெற்றுக்கொள்ள முடியும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, காணி அமைச்சு உள்ளிட்ட 3 ராஜாங்க அமைச்சுக்களின் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்த வருடமானது நாட்டின் பொருளாதாரத் துறையில் மிகவும் முக்கியமான ஒரு வருடம் என்பது குறிப்பிடத்தக்கது.  இறப்பர் உற்பத்தி ஏற்றுமதி மூலம் இந்த வருடத்தில் ஒரு டொலர் மில்லியன் மேற்பட்ட வருமானத்தை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கின்றோம்.

அதேபோன்று தேங்காய் ஏற்றுமதி மூலம் 900 மில்லியன் டொலரையும் கறுவா உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள் மூலம் 450 மில்லியன் அமெரிக்கன் டொலர் வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கிணங்க இந்த வருடத்தில் பெருந்தோட்ட கைத்தொழில் துறை மூலம் 3.8 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் இலக்காகும்.

அதே போன்று இந்த வருடத்தில் ஆடைத் தொழில் ஏற்றுமதி மூலம் 4.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக் கொள்ளமுடியும் என்பதோடு எதிர்வரும் இரண்டு வருடங்களில் ஆடை தொழில்துறை உற்பத்தி ஏற்றுமதி மூலம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் அதே போன்று பெருந்தோட்ட கைத்தொழில் உற்பத்தி ஏற்றுமதி மூலம் மேலும் ஐந்து பில்லியன் டொலர்களையும்  வருமான இலக்காகக் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் 2010ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை தேயிலை ஏற்றுமதி மூலம்1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இந்த வருடம் தேயிலை ஏற்றுமதி மூலமாக 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கு அதிக விலை காணப்படுகிறது. அந்த வகையில் இலங்கைத் தேயிலை 3 டொலராகவும் இந்தியாவின் தேயிலை இரண்டு டொலராகவும் கென்யாவின் தேயிலை 1.5 டொலராகவும்  காணப்படுகிறது.

அந்த வகையில் தேயிலை உற்பத்தி தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது தேயிலை உற்பத்தியாளர்களுக்கு4,75 வட்டி அடிப்படையில்  கடன் பெற்றுக்கொடுப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கடன் பிரேரணை முறை ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறோம்.

அத்துடன் இலங்கைக்கு கூடுதலான உரம் கொண்டுவந்திருப்பது 2020 காலப்பகுதியிலாகும். அது 8இலட்சத்தி37ஆயிரம் மெட்ரிக்தொன், 2013 இல் 5இலட்சத்து 3ஆயிரம் மெட்ரிக்தொனாகும்.இருந்தபோதும் நாட்டில் தேயிலை, நெல், ஏனைய விவசாய உற்பத்திகள் 10வீதம் கூட அதிகரிக்கவில்லை.

அதனால் இரசாயன உர பாவனைக்கும் உற்பத்தி பலனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் எமது நாட்டில் உர துஷ்பிரயாேகம் இடம்பெறுகின்றது என்பது தெளிவாகும். அத்துடன் இந்த வருடம் இதுவரை 260கிலாே மில்லியன் தேயிலை உற்பத்தி பெறப்பட்டிருக்கின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40