பெரும்பான்மை யாருக்கு என்பதை அடுத்த தேர்தலில் நிரூபிப்போம் - அரசாங்கத்தை எச்சரிக்கும் சுதந்திர கட்சி

Published By: Digital Desk 2

28 Nov, 2021 | 05:12 PM
image

எம்.மனோசித்ரா

அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கைகளிலேயே உள்ளது. அடுத்த தேர்தல் எதுவாக இருந்தாலும் அதில் பெரும்பான்மை பலம் யாருக்கு என்பதை நிரூபிப்போம். இதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை மறுசீரமைத்து பலப்படுத்துவதற்கான வியூகம் வகுக்கப்படுவதாக சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

சுதந்திர கட்சியின் மீதான விமர்சனங்களுக்கு அரசாங்கத்திலிருந்து விலகுவதன் மூலம் பதிலடி கொடுப்பதை விட, அடுத்தடுத்த தேர்தல்களில் எடுக்கப்படும் தீர்க்கமான முடிவே முக்கியத்துவமுடையது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுதந்திர கட்சியின் மீதும் முன்னாள் ஜனாதிபதி மீதும் பொதுஜன பெரமுனவினால் முன்வைக்கப்படும் கடும் விமர்சனங்கள் தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை சுதந்திர கட்சியின் கைகளிலேயே உள்ளது. அடுத்தடுத்த தேர்தல்களை எதிர்கொள்வதற்காக தொகுதிகளுக்கு சென்று கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு எதிர்வரும் வாரங்களில் கூடவுள்ள மத்திய குழு கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை மீண்டும் பலப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளோம்.

அடுத்து எந்த தேர்தல் நடத்தப்படும் என்பதை அடிப்படையாகக் கொண்டு சுதந்திர கட்சி எவ்வாறு தேர்தலை எதிர்கொள்ளும் என்பது தீர்மானிக்கப்படும். இதன் போதே சுதந்திர கட்சி தனித்து போட்டியிடுமா இல்லையா என்பது அறிவிக்கப்படும். அண்மையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆற்றிய உரை எம்மை வெளியேற்றுவதற்கான முன்னேற்பாடாகக் கூட இருக்கலாம்.

எவ்வாறிருப்பினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக அவ்வாறு செய்ய முடியாது. பாராளுமன்றத்தில் யோசனையை சமர்ப்பித்து அந்த வழிமுறைகளின் ஊடாகவே வெளியேற்ற முடியும். இதற்கு முன்னரும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருந்த ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் சிறிமாவோ பண்டாநாயக்க ஆகியோரது ஆட்சிகளும் சரிவடைந்தன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்பட்டாலும் , மக்கள் விரும்பவில்லை எனில் ஆட்சி சரிவடையும். தற்போது விவசாயிகள் உள்ளிட்ட சகல துறையினரும் அரசாங்கத்தின் மீது அதிருப்தியடைந்துள்ளனர். எனவே அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படலாம். ஆனால் மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை.

எவ்வாறிருப்பினும் எம்மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக அரசாங்கத்திலிருந்து விலகுவது முட்டாள் தனமாகும். அதற்கு பதிலாக அடுத்தடுத்த தேர்தல்கள் தொடர்பில் எடுக்கப்படும் தீர்க்கமான முடிவே முக்கியத்துவமுடையது. அதனை உரிய நேரத்தில் எடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56