இராஜதுரை ஹஷான்
உலக சந்தையின் விலையேற்றத்திற்கமைய எரிபொருளின் விலையை அதிகரிப்பது அவசிமாகும். 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை தடையில்லாமல் எரிபொருளை விநியோகிக்க முடியும்.
எக்காரணிகளுக்காகவும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எரிபொருள் விலை தொடர்பில் விலை சூத்திரம் மற்றும் விலையை நிர்ணயிக்க நிதியம் ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளமை சிறந்தாகும்.உலக சந்தையின் விலையேற்றத்திற்கமைய எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டும் என தொடர்ந்து வலு சக்தி அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்துள்ளோம்.
இவ்வருடத்தின் முதல் காலாண்டு பகுதியில் உலக சந்தையில் மசகு எண்ணெய் ஒரு தாங்கியின் விலை 54 டொலர் தொடக்கம் 58 டொலராக காணப்பட்டது. அக்காலக்கப்பகுதியில் எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை.
உலக சந்தையில் மசகு எண்ணெய் ஒரு தாங்கியின் விலை தற்போது 96 டொலர் தொடக்கம் 98 டொலர்களாக உயர்வடைந்துள்ளன அவ்வாறான நிலையில் தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலையை அதிகரிக்காமல் இருந்தால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.
உலக சந்தையின் விலையேற்றத்திற்கமைய தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.வெகுவிரைவில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கிறோம்.
அரசாங்கம் எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டும் அல்லது வரி குறைப்பு செய்ய வேண்டும் இவ்விரு தீர்மானங்களையும் செயற்படுத்தாமலிருந்தால் பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் நட்டமடையும்.விலை அதிகரிக்காத காரணத்தினால் எதிர்க் கொண்டுள்ள நட்டத்தை ஒவ்வொரு வாரமும் வலு சக்தி அமைச்சிடம் முன்வைத்துள்ளோம்.
நாட்டில் எந்நிலையிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை தடையில்லாமல் எரிபொருள் விநியோகிக்க முடியும். மாத கணக்கில் எரிபொருளை சேமித்து வைக்கும் வசதி நாட்டில் கிடையாது . குறைந்த பட்சம் 30 நாட்களுக்கு தேவையான எரிபொருளை மாத்திரம் சேமித்து வைக்க முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM