கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவ பகுதியினூடான போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கேகாலை மற்றும் கடுகண்ணாவ பகுதிகளில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த பகுதியினூடான போக்குவரத்து தற்காலிகமாக நேற்றிரவு மூடப்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.

இந் நிலையில் இன்று காலை 6.00 மணிக்கு கீழ் கடுகண்ணாவ பகுதியினூடான போக்குவரத்து மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.