(நா.தனுஜா)
பிரிட்டன் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் பாராளுமன்றக் கட்டடத்திற்கு முன்பாக 'நாங்கள் நினைவுகூருகின்றோம்' என்ற வாசகத்தின்மீது கார்த்திகைப்பூக்கள் வைக்கப்பட்டு மாவீரர் தினம் நினைவுகூரப்பட்டிருக்கின்றது.
அதுமாத்திரமன்றி தமிழர்களை மிகமோசமான அடக்குமுறைகளுக்கு உட்படுத்தியதுடன் போர்க்குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் இழைக்கப்பட்ட சிவில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதென்பது மிகவும் முக்கியமானதாகும். இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகூரும் உரிமையில் இலங்கை அரசாங்கம் தடைகளை ஏற்படுத்திவருகின்றது என்றும் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்தோடு பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதில் பிரிட்டன் அரசாங்கம் முன்னிலை வகிக்கவேண்டியது அவசியமாகும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எலியற் கொல்பேர்ன், பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர், தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்றக்குழுவின் தலைவர்
சமாதானம், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான போராட்டமும் பல குடும்பங்கள் தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது? என்ற கேள்விக்கான பதிலை அறிந்துகொள்வதற்காக முன்னெடுக்கின்ற போராட்டமும் தற்போதுவரை தொடர்கின்றது.

இலங்கையில் தற்போதும் தமிழ்மக்கள் மனித உரிமை மீறல்களுக்கு முகங்கொடுத்துவருகின்றார்கள். இவ்வாறானதொரு பின்னணியில் உண்மை மற்றும் நீதிக்கான போராட்டம் தொடர்கின்றது.
போல் ஸ்கலி, லண்டன் மாநகர அமைச்சர்
இலங்கையில் இடம்பெற்ற போரில் உயிரிழந்தவர்கள், காணாமல்போனவர்கள் மற்றும் தமது அன்பிற்குரியவர்களை இழந்த குடும்பங்களுடனான எனது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகின்றேன். அதேவேளை உண்மை, நல்லிணக்கம் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நீதி ஆகியவற்றை அடைந்துகொள்வதற்கான எமது முயற்சிகள் இருமடங்காக மாற்றப்படுவதையும் உறுதிசெய்யவேண்டும்.
சாம் டெரி, பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்
பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்தின்மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதில் பிரிட்டன் அரசாங்கம் முன்னிலை வகிக்கவேண்டியது அவசியமாகும். அதுமாத்திரமன்றி எதிர்காலத்தில் இலங்கையுடன் வர்த்தக ரீதியான தொடர்புகளைப் பேணும்போது அந்நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படுவதுடன் விதிக்கப்படும் கடப்பாடுகளில் உரியவாறான முன்னேற்றம் அடையப்படுவதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.

மேலும் போர்க்குற்றங்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கக்கூடிய இலங்கையின் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்காவினால் பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கெதிராக பிரிட்டனும் 'மெக்னிற்ஸ்கி' முறையிலான தடையை விதிக்கவேண்டும்.
இது இலங்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டிய தருணமாகும். இனப்படுகொலையினால் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பில் சர்வதேச பொறிமுறையொன்றின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.
மேலும் இலங்கையில் இடம்பெற்ற போருக்கு பிரித்தானியாவின் காலனித்துவத்தின் வேர்கள் ஒரு காரணமாக இருப்பதனால், இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தவேண்டிய பொறுப்பு பிரிட்டனுக்கு இருக்கின்றது. எனவே தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு பிரிட்டன் மதிப்பளிக்கவேண்டியது அவசியமாகும்.
நீதியையும் சுயநிர்ணய உரிமையையும் உறுதிசெய்துகொள்வதற்கான தமிழ்மக்களின் போராட்டத்திற்கு தொழிற்கட்சி எப்போதும் ஆதரவளித்து வந்திருப்பதுடன் எதிர்வருங்காலங்களிலும் ஆதரவளிக்கும்.
பொப் ப்ளக்மான், பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்
இலங்கையில் சுதந்திரத்திற்காகவும் நீதிக்காகவும் போராடிய அனைவருக்குமான கௌரவத்தை அளிப்பதற்கான நாள் (மாவீரர் தினம்) இதுவாகும். இலங்கையில் இறுதிக்கட்டப்போரின்போது நிகழ்த்தப்பட்ட மிகமோசமான வன்முறைகள் மற்றும் இனப்படுகொலைகளின்போது சுமார் 70,000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன் சுமார் 280,000 பேருக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியவில்லை.
மக்கள் போரில் உயிரிழந்த தமது அன்பிற்குரியவர்களை நினைவுகூருவதற்கு இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தடைவிதித்துவருகின்றது. இருப்பினும் பாதிக்கப்பட்ட சமூகத்தின் வலியையும் கோபத்தையும் மேலும் தூண்டும் வகையில் நாட்டில் வெற்றிச்சின்னங்கள் நிறுவப்பட்டிருப்பதுடன் வெற்றிக்கொண்டாட்டங்களும் நடாத்தப்படுகின்றன.

போரின்போது உயிரிழந்த தந்தைமார், தாய்மார், சகோதரர்கள், சகோதரிகள், மகன்மார், மகள்மாரை நினைவுகூருவதற்கான உரிமை தமிழர்களுக்கு மறுக்கப்படுகின்றது. பாதுகாப்புத்தரப்பினரின் அடக்குமுறைகள், அச்சுறுத்தல்கள், கைதுநடவடிக்கைகள் அனைத்திற்கும் மத்தியிலும் தமிழர்கள் தமது அன்பிற்குரியவர்களைத் தனியாக (வீடுகளில்) நினைவுகூருகின்றார்கள். இந்நிலையில் போரின்போது தமது அன்பிற்குரியவர்களை இழந்த அல்லது அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமலிருக்கும் அனைத்துக் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தெரேஸா வில்லர்ஸ், பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்
தமிழர்களை மிகமோசமான அடக்குமுறைகளுக்கு உட்படுத்தியதுடன் போர்க்குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் இழைக்கப்பட்ட சிவில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவது மிகவும் முக்கியமானதாகும். எனவே தமிழ்மக்கள் முகங்கொடுத்த மிகமோசமான வரலாற்றின் ஓரங்கமாக தமது அன்பிற்குரியவர்களைப் பறிகொடுத்த அனைத்துக் குடும்பங்களுடனும் இந்த நாளில் (மாவீரர் தினம்) எனது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகின்றேன்.

ஸ்டீவ் பேக்கர், பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்
இலங்கையின் அடக்குமுறைகளுக்கும் வன்முறைகளுக்கும் முகங்கொடுத்த அனைத்துத் தமிழர்களையும் நினைவுகூருகின்றோம். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றார்கள் என்பதையும் மேலும் பலருக்கு என்ன நேர்ந்தது என்பதே தெரியாதுபோயுள்ளது என்பதையும் நாமறிவோம். எவ்வித தடைகளுமின்றி நினைவுகூரல் முன்னெடுக்கப்படவேண்டியது மிகமுக்கியமாகும். ஆனால் அது அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் சாத்தியப்படாமை பெரிதும் விசனமளிக்கின்றது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM