மியன்மார் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியான ஆங்சாங் சூ கீயின் தேசிய ஜனநாயக லீக் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. 
கடந்த ஞாயிற்றுக்கிழமை 25 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக அங்கு ஜனநாயக ரீதியிலான பொதுத் தேர்தல் நடைபெற்றது. 
தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, இதுவரை எண்ணப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், 149 கீழ்சபை தொகுதிகளில் 135 தொகுதிகளை சூகியின் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 
மேலும் அவர்கள் 90 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.