மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு கடற்கரையில் தமிழரசு கட்சியின் பிரமுகர் பீற்றர் இளஞ்செழியன் அவரது மனைவி உள்ளிட்டவர்கள் நினைவேந்தலை மேற்கொள்வதற்காக முற்பட்ட வேளை பீற்றர் இளஞ்செழியனை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் அவரது மனைவி வீதியில் இருந்து போராட்டம் மேற்கொண்டதுடன் என்ன தடைவந்தாலும் நினைவேந்தல் மேற்கொள்வேன் எனக் கூறி நினைவேந்தலை மேற்கொள்ள ஆயத்தங்களை மேற்கொண்ட நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் முல்லைத்தீவு கடற்கரையில் அவருக்கு ஆதரவாக ஒன்றுகூடினர்.

இதையடுத்து மக்கள் 06.05 மணிக்கு உணர்வெழுச்சியுடன் சுடர் ஏற்றி அஞ்சலி மேற்கொண்டனர்.

அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம் , வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லம் ஆகிய இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன .

முல்லைத்தீவு - அளம்பில் பகுதியில்  உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் !

முல்லைத்தீவு - அளம்பில் பகுதியில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மாவீரர்களுக்காக  சுடரேற்றி  தனது அஞ்சலியை உணர்வெழுச்சியுடன் மேற்கொண்டார்.

மேலும் இந்த அஞ்சலி நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், சமூகசெயற்பாட்டாளர் பத்மநாதன் சுபாகரன் ஆகியோர் பங்குகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் சுடரேற்றி அஞ்சலி

மாவீரார்னால் நினைவேந்தல் நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இராணுவம் பொலிஸாரின் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு கடற்கரை பிரதேசம் , முல்லைத்தீவு தேவிபுரம் துயிலும் இல்லம் , வன்னிவிளாங்குளம் துயிலும் இல்லம் , ஆகிய துயிலும் இல்லங்களில் இராணுவம் பொலிஸாரின் பலத்த கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர்களுக்கு 06.05 மணிக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. 

இராணுவ கெடுபிடிகள் காரணமாக மக்கள் தத்தமது வீடுகளிலும் உணர்வுபூர்வமாக சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் அவரது வீட்டுக்கு முன்பாக வீதி ஓரத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.