புகையிரதங்களில் மோதி இருவர் பலி

By T. Saranya

27 Nov, 2021 | 03:36 PM
image

(எம்.மனோசித்ரா)

இரு வெவ்வேறு புகையிரதங்களில் மோதி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் பெலியத்தையிலிருந்து மருதானை வரை பயணித்த காலுகுமாரி சீக்ரகாமி புகையிரதத்தில் மோதி 43 வயதுடைய இங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார்.

இதேபோன்று ராமகிருஷ்ணா வீதிக்கு அருகில் புகையிரத கடவையில் கொழும்பிலிருந்து தெஹிவளை நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி 48 வயதுடைய வெள்ளவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார். 

வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right