புத்தளத்தில் உயிரிழந்த யானையை குழிதோண்டி புதைத்தவர் கைது

Published By: Digital Desk 3

27 Nov, 2021 | 03:15 PM
image

புத்தளம், கல்லடி 6 ஆம் கட்டை பகுதியில் உயிரிழந்த யானை ஒன்றை குழிதோண்டி புதைத்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர்  புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், உயிரிழந்த நிலையில் இரண்டு நீளமான தந்தங்களுடன் புதைக்கப்பட்ட குறித்த யானையின் உடலமும் நேற்றைய தினம் தோண்டியெடுக்கப்பட்டதாகவும் புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் எரந்த கமகே தெரிவித்தார்.

குறித்த பகுதியிலுள்ள காணியில் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருக்கும் மின்சாரம் வேலியில் சிக்கி மேற்படி யானை கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதியில் விஷேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன்போதே, மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்த யானை புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் காணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அத்துடன், குறித்த யானையின் இரண்டு தந்தங்களையும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தமது பொறுப்பில் எடுத்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10